மகளிர் தினத்தில் மனைவியுடன் ஜெயம் ரவி செய்த வேலையை பாருங்க...வைரலாகும் வீடியோ
சென்னை : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர், நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். நடிகைகள் சிலர் தமிழில் கவிதையாக வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சிலர் தங்களின் அம்மா, பாட்டியை பாராட்டி, குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, மகளிர் தினத்தை முன்னிட்டு மனைவியுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் மனைவியும் செய்யும் செய்கைகளை ஜெயம் ரவியும் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் அது முடியாமல் கவிழ்ந்து விழுகிறார். இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த க்யூட்டான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவுடன் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ள பதிவில், பெண்களால் எதுவும் செய்ய முடியும். உங்கள் பிரியமானர்களுடன் இதை நீங்களும் முயற்சித்து பாருங்கள். அனைவருக்கும் வலிமையான மகளிர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர். க்யூட்டான வீடியோ என பலரும் பாராட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











