Jayam Ravi Home Tour: ECRல் பிரம்மாண்ட பங்களா.. ஜெயம் ரவியின் புது வீடு எப்படி இருக்குன்னு பாருங்க!
சென்னை: பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் நாயகன் ஜெயம் ரவி சமீபத்தில் ECRல் பிரம்மாண்டமாக கட்டி குடிபுகுந்த வீட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
சென்னை தி நகரில் உள்ள பத்மநாபன் தெருவில் ஒரு சூப்பரான வீடு ஜெயம் ரவிக்கு உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பிரம்மாண்ட பங்களாவை கட்டி குடும்பத்துடன் குடியேறி இருக்கிறார் ஜெயம் ரவி.

சமீபத்தில் புதுமனை புகுவிழா நடத்திய ஜெயம் ரவியின் வீட்டுக்கு குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.
நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜெயம் ரவிக்கு ஆரவ் ரவி மற்றும் அயான் ரவி என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவி உடன் மூத்த மகன் ஆரவ் ரவி நடித்திருப்பார்.
ECRல் பிரம்மாண்ட வீடு

புதுமனை புகுவிழாவை தொடர்ந்து சுமங்கலி விரத நிகழ்ச்சியையும் நடிகர் ஜெயம் ரவி தனது புது வீட்டில் கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களையும் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் ஜெயம் ரவியின் வீடு உள்ளே எப்படி அழகாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது என்பதை ரசிகர்கள் பார்த்து வியந்து போயுள்ளனர்.
இந்த இரு வீடுகள் மட்டுமின்றி ஹைதரபாத்திலும் நடிகர் ஜெயம் ரவிக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சில காலம் ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தான் அவர் குடும்பத்துடன் தங்கியிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகின.
எடிட்டர் மோகனின் மூத்த மகன் மோகன் ராஜா இயக்குநராக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை கலக்கி வரும் நிலையில், இளைய மகன் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
பொன்னியின் செல்வன் 2 சம்பளம்

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், ஜெயம் ரவியின் கைவசம் இறைவன், சைரன் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மேலும், மீண்டும் அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து தனி ஒருவன் 2 படத்தையும் விரைவில் தொடங்கப் போகிறார் என்றும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன.
சினிமாவில் எந்தளவுக்கு பிசியாக இருந்தாலும், அவ்வப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை ஜெயம் ரவி தவற விடுவதே இல்லை. காதலர் தினத்தை முன்னிட்டு மனைவியுடன் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்ற ஜெயம் ரவி அங்கே செம ரொமான்ட்டிக்காக எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.
அந்த போட்டோக்களை பார்த்த பல ரசிகர்கள் இவர் ஜெயம் ரவியின் மனைவியா? அல்லது கோலிவுட்டுக்கு புதிதாக வந்த ஹீரோயினா? என கமெண்ட் போட்டு ஆர்த்தி ரவியை வெட்கப்பட வைத்தனர்.

சென்னை ஈசிஆரில் ஜெயம் ரவி குடி புகுந்திருக்கும் நிலையில், ஏற்கனவே அங்கே நடிகர்கள் விஜய், அஜித், சரத்குமார், த்ரிஷா, ஜீவா உள்ளிட்ட பலர் சொந்தமாக வீடு வைத்து வசித்து வருகின்றனர். கூடிய சீக்கிரமே சிம்பு மற்றும் பிரசன்னா - சினேகா ஈசிஆரில் குடிபுக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Jayam Ravi's New ECR Home Tour photos are here: ஜெயம் ரவியின் புதிய பிரம்மாண்டமான ஈசிஆர் வீடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு ஜெயம் ரவி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











