த்ரிஷா - ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம்.. ஒரு முன்னோட்டம்

By Shankar

ஜெயம் ரவி - த்ரிஷா நடிப்பில் வேக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது பூலோகம் படம்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் எஸ்பி ஜனநாதனிடம் பணியாற்றிய கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார்.

கதையைக் கேட்டபோதே அந்த கதை சொல்லப்பட்ட நேர்த்திக்க்காக பாராட்டுகளைப் பெற்ற கதை இது.

குத்துச் சண்டை

குத்துச் சண்டை

பூலோகம் படம் முழுக்க முழுக்க ஒரு குத்துச் சண்டை வீரனை மையப்படுத்தி உருவாகிறது. வட சென்னையில் பிரபலமாகத் திகழ்ந்த ஒரு குத்துச் சண்டை வீரனின் கதைதான் இந்தப் படம்.

வட சென்னை

வட சென்னை

வட சென்னையில் வாழ்வியல் முறைகள், வட்டார வழக்கங்களை மையப்படுத்தி இந்தக் கதையை எடுக்கிறார்கள். ஜெயம் ரவிக்கு வட சென்னைவாசியாக நடிப்பது புதிதல்ல. ஏற்கெனவே தீபாவளியில் பில்லு பாத்திரத்தில் நடித்தவர்.

கல்யாண கிருஷ்ணன்

கல்யாண கிருஷ்ணன்

"யதார்த்தத்திலிருந்து விலகாமல், எழுதிய திரைக்கதையில் எதற்காகவும் சமரசம் செய்யாமல் எடுத்து வருகிறோம். குத்து சண்டை ஆசானான பொன்வன்னனுக்கும் சிஷ்யனாக நடிக்கும் ஜெயம்ரவிக்கும் நடக்கும் உணர்ச்சி பூர்வமான காட்சிகள் ஜெயம் ரவியின் நடிப்பு திறமையை வெளிச்சம் போட்டு காட்டும்," என்கிறார் இயக்குநர்.

த்ரிஷா

த்ரிஷா

திரை உலகில் அரங்கேறி பத்து வருடங்களானாலும் அதே மெருகுடன் ...அதே இளமையுடன் காட்சி தரும் த்ரிஷாவுக்கு தமிழில் இது ஒரு மறக்க முடியாத படமாக அமையும் என்கிறார் இயக்குநர்.

நேதன் ஜோன்ஸ்

நேதன் ஜோன்ஸ்

இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சம் - நேதன் ஜோன்ஸ். இவர் பிரபலமான அமெரிக்க நடிகர். முன்னாள் குத்து சண்டை வீரர். ஏழு அடி உயர ஆஜானுபாகுவான இவருடன் படத்தில் மோதுபவர் ஜெயம் ரவி!

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ், அர்பிரித் ரங்கா, ஷண்முக ராஜன் என அனுபவமிக்க குணச்சித்திர நடிகர்கள் இந்தப் படத்தில் உள்ளனர்.

படத்துக்கு வசனம் எழுதியிருப்பவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன். இசை ஸ்ரீகாந்த் தேவா. எஸ் ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X