'கோமாளி'யில் முதன்முறையாக 9 வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் 24வது படத்திற்கு கோமாளி எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

முதன்முறையாக 9 வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி- வீடியோ

சென்னை: தனது 24வது படமாக உருவாகி வரும் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் முதன்முறையாக 9 வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். முதல் முறையாக 'நவராத்திரி' படத்தில் 9 வேடங்களில் நடித்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சாதனை புரிந்தார்.

அவரைத் தொடர்ந்து, 'தசாவதாரம்' படத்தில் 10 வேடங்களில் நடித்து கமல்ஹாசன், புதிய சாதனையை ஏற்படுத்தினார். இந்நிலையில், இந்தப் பட்டியலில் ஜெயம் ரவியும் சேர்ந்துள்ளார்.

 கோமாளி தலைப்பு:

கோமாளி தலைப்பு:

ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு கோமாளி எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதன் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

 9 வேடம்:

9 வேடம்:

இப்படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், "இது, ஜெயம் ரவி நடிக்கும் 24-வது படம். இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

 முக்கிய வேடத்தில் யோகி பாபு:

முக்கிய வேடத்தில் யோகி பாபு:

படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 நகைச்சுவை படம்:

நகைச்சுவை படம்:

தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் படம், இது. இதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X