ஜெயம் ரவி கைவசம் இத்தனை படம் இருக்கா... இந்த ஆண்டு தரமான சம்பவம் காத்திருக்கு!
சென்னை : நடிகர் ஜெயம் ரவி கைவசம் இந்த ஆண்டு ஏராளமான படங்கள் வெளியாக உள்ளன.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது.
பொன்னியின் செல்வன் நாவலால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படையெடுத்து வந்ததால், படம் பல நாட்கள் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடியது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபாலா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அகிலன்
பூலோகம் படம் இயக்குநர் என் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் அகிலன். இதில், பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், ஜெயம் ரவி கேங்ஸ்டராகவும், பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 10ந் தேதி வெளியாக உள்ளது.

இறைவன்
அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் படம் இறைவன். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த படம் இந்த ஆண்டு ரிலீசாகும் என கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் சைரன்
அந்தோனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத்திற்கு சைரன் என் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

ஜெயம் ரவியின் 30வது படம்
ஜெயம் ரவியின் 30வது படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்க உள்ளார். இப்படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியாங்கா அருள்மோகன் நடிக்க உள்ளார். அக்கா, தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அந்த படத்தில், நட்டி என்கிற நடராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் போடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.


Click it and Unblock the Notifications











