»   »  விஜய் மகனை அடுத்து நடிக்க வரும் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்

விஜய் மகனை அடுத்து நடிக்க வரும் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவியுடன் அவரது மகன் ஆரவும் சேர்ந்து நடிக்க உள்ளதாக அவர் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த் சாமி நடித்துள்ள போகன் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் சக்தி ராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.


Jayam Ravi's son to act with him in Tik Tik Tik

படம் குறித்து ரவி ட்விட்டரில் தனுஷ் பாணியில் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சில மணிநேரங்களில் நான் உங்களிடம் ஒரு அறிவிப்பு வெளியிட உள்ளேன் என தனுஷ் போன்று சஸ்பென்ஸ் வைத்து ட்வீட்டியிருந்தார் ரவி.


சில மணிநேரங்கள் கழித்து ட்விட்டரில் ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பு இது தான்,என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள்! நானும் என் மகன் ஆரவும் சேர்ந்து டிக் டிக் டிக் படத்தில் நடிக்கிறோம்!!!கடவுள் அவனை ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.


English summary
Jayam Ravi tweeted that, 'Happiest day of my life! My son Aarav n I are acting together in #TikTikTik !!! God bless him 🙏 ShaktiRajan'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil