நக்கலாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்...ஜெயம் ரவி கொடுத்த நச்சுன்னு பதில்

சென்னை : கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக பலரின் வாழ்க்கை அடியோடு மாறி உள்ளது. தீவிமடைந்து வரும் கொரோனா இரண்டாம் அலையால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க, நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசிற்கு உதவுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து தமிழகர்கள் நிதி அளித்து வருகின்றனர்.

நிதி அளித்த பிரபலங்கள்

நிதி அளித்த பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து தங்கள் பங்க நிதி தொகையை அளித்து வருகின்றனர். சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன், விக்ரம், ரஜினி, டைரக்டர்கள் ஷங்கர், வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரும் நிதி அளித்துள்ளனர். இதே போன்று ஜெயம் ரவியும் தனது தந்தை எடிட்டர் மோகன் மற்றும் சகோதரரும் டைரக்டருமான மோகன் ராஜாவுடன் சென்று முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்.

அனைவரும் நிதி வழங்குங்கள்

அனைவரும் நிதி வழங்குங்கள்

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, மிகவும் மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த சமயத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அதனால் அனைவரும் தங்களால் முயன்ற அளவிற்கு நிதி வழங்குங்கள் என கேட்டுக் கொண்டார்.

ஜெயம் ரவி அளித்த நச் பதில்

ஜெயம் ரவி அளித்த நச் பதில்

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஜெயம் ரவியிடம், நீங்கள் எவ்வளவு நிதி அளித்தீர்கள் என கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ஜெயம் ரவி, என்னால் முடிந்ததை கொடுத்தேன். அது எவ்வளவு என்பது முக்கியமல்ல என்றார்.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

ஜெயம் ரவியின் இந்த ஸ்மார்ட்டான பதில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவியதும் ஜெயம் ரவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பத்திரிக்கையாளரிடம் அவர் பதிலளித்த விதம், அவர் சொன்ன பதில் ஆகியன லைக்குகளை அள்ளி வருகிறது.

வைரலாகும் வீடியோ

ஜெயம் ரவி குடும்பத்தின் சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி, முதல்வரிடம் நிதி அளித்து 2 நாட்கள் ஆன நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X