ஒருவழியாக விண்வெளிக்கு கிளம்ப தயாராகிவிட்டது டிக் டிக் டிக்!
ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது.
Recommended Video

அய்யோ பாவம் ஜெயம் ரவி...
சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் விண்வெளி படமான டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சக்தி சவுந்தர் ராஜன் படத்தை இயக்கியுள்ளார்.

ஜெயம் ரவி மகன் ஆரவ் இந்த படத்தில் நடித்துள்ளார். ஆரோன் ஆசிஸ், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். நேமிசந்த் ஜபக் படத்தை தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமானுக்கு இது நூறாவது படமாகும். ஏற்கனவே பாடல்கள் வெளியான நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் டிக் டிக் டிக் படம் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











