Jayam Ravi wife: பிரியங்கா மோகனுக்கே டஃப் கொடுப்பார் போல.. ஜெயம் ரவி மனைவி கொடுத்த செம ஹாட் போஸ்!
சென்னை: பல ஆண்டுகளாக சைலன்ட்டாக இருந்து வந்த நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமீப காலமாக சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
தனது கணவர் ஜெயம் ரவி மற்றும் தனது இரு மகன்களுடன் போட்டோக்களை வெளியிட்டு வந்த ஆர்த்தி ரவி லேட்டஸ்ட்டாக நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு சோலோவாக செம ஹாட்டாக இருக்கும் போட்டோக்களை போட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.

பார்க்க பிரியங்கா மோகன் போலவே இருக்கீங்க என்றும் நீங்களே ஜெயம் ரவிக்கு ஜோடியா படத்தில் நடிக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஜெயம் ரவியின் மனைவி: கடந்த 2009ம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவியை ஆர்த்தி திருமணம் செய்துக் கொண்டார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு ஆரவ் மற்றும் அயான் என இரு மகன்கள் உள்ளனர்.
ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகனாகவே ஆரவ் நடித்திருந்தார். குறும்பா பாட்டை பார்த்த பல ரசிகர்கள் ஜெயம் ரவியின் மகனை கொஞ்சித் தீர்த்தனர். இந்நிலையில், ஜெயம் ரவியின் மனைவியும் நடிக்க வரப் போகிறாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அப்படியொரு அழகு: பொன்னியின் செல்வனாக நடிக்க மகேஷ் பாபுவை முதலில் தேர்வு செய்த மணிரத்னம் அவரது கால்ஷீட் கிடைக்காத நிலையில், அழகான ஒரு கோலிவுட் ஹீரோவை தேடி வந்த நிலையில், அருள்மொழி வர்மனாக நடிக்க ஜெயம் ரவியை தேர்வு செய்திருந்தார்.
அவ்வளவு அழகான ஜெயம் ரவியை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு அவரது மனைவி ஆர்த்தியும் செம அழகு என்பது அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்தாலே தெரியும்.
பிரியங்கா மோகனுக்கே டஃஃப்: தெலுங்கு மற்றும் தமிழில் இளம் நடிகையாக வலம் வரும் நடிகை பிரியங்கா மோகனை போலவே ஆர்த்தி ரவி இருக்கிறார் என்றும் பிரியங்கா மோகனுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஆர்த்தி ரவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதாக ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஆர்த்தி ரவியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

குஷ்பு போட்ட கமெண்ட்: ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவியின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த நடிகை குஷ்பு 'ஸ்டன்னிங்' என கமெண்ட் போட்டு ஹார்டின்களையும் ஃபயர் எமோஜிக்களையும் பறக்கவிட்டுள்ளார்.
ஸ்ரேயா என்ன சொன்னார் தெரியுமா?: கவர்ச்சி நடிகையாக இன்னமும் ஹாட் போட்டோக்களை அடுக்கி வரும் நடிகை ஸ்ரேயாவும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அழகை பார்த்து அப்படியே அசந்துப் போயுள்ளார்.
ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ், 'Uffff so hot' என கமெண்ட் போட்டு ஜெயம் ரவி மனைவி செம ஹாட்டென பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











