சூப்பர் பையன்டா நீ… மகனுக்கு ஜெயம் ரவி பிறந்தநாள் வாழ்த்து!
நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள்.
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன் இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகன் அயான் ரவி 5வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அயானின் சுட்டித் தனத்தை பாராட்டி ஜெயம் ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மகன் அயான் ரவியின் முகத்தைக்காட்டாமல் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ள ரவி, எங்களுடைய வாழ்க்கையில், அன்பு பாசம், மகிழ்ச்சியை கொடுத்ததற்கு நன்றி. நீ ஒரு சூப்பரான பையன்டா என கொஞ்சியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியின் மூத்தமகன் ஆர்யன் ரவி, அவருடன் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்திற்கு படம் வித்தியாசத்தைக் காட்ட வேண்டுமென முயற்சித்து வருகிறார் ஜெயம் ரவி.
ஷக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் தமிழின் முதல் விண்வெளி திரைப்படம் என்று அழைக்கப்பட்ட டிக் டிக் டிக் திரைப்படம் நன்கு பேசப்பட்டது. இப்போது அடங்க மறு திரைப்படம் வெளியாக உள்ளது. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications











