எல்லாரும் என்னை அப்படி பார்க்காதீங்க.. விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ஜெயம் ரவி வெளியிட்ட வீடியோ!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆனால், இந்த பிறந்தநாள் அவருக்கு எந்தளவுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என்பது தெரியவில்லை. பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அதிரடியாக தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக ஜெயம் ரவி அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் படங்களில் அருள்மொழி வர்மனாக நடித்து அசத்திய ஜெயம் ரவி அதன் பின்னர் சோலோவாக நடித்த அகிலன், இறைவன், சைரன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

மாமியார் தயாரிப்பில் சைரன் படத்தில் நடித்த ஜெயம் ரவி அடுத்ததாக தீபாவளி ரிலீஸாக ராஜேஷ். எம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரதர் படத்தை வெளியிட காத்திருக்கிறார். விவாகரத்து அறிவிப்புக்குப் பின் ஜெயம் ரவி சில நாட்கள் அப்செட்டாக இருப்பார் என்று பார்த்தால், இனிமே சினிமாவில் தான் சின்சியராக இருக்கப் போகிறேன் என்கிற முடிவில் தனது அடுத்த படம் தொடர்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
தங்கமான மனசு: ஜெயம் ரவி தனது படங்களில் வில்லனை கூட அதட்டியோ, கடுமையாக திட்டியோ பேசி பார்த்திருக்க மாட்டார்கள் ரசிகர்கள். செம சில்லாகவும் கூலாகவுமே ஹேண்டில் செய்வார். அதே போல சினிமாவிலும் யாருடனும் போட்டியெல்லாம் போட்டது கிடையாது. தங்கமான மனசு கொண்டவர் ஜெயம் ரவி என பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். பிரபல எடிட்டர் மோகனின் மகன் தான் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா முன்னணி இயக்குநராக தமிழ், தெலுங்கில் கலக்கி வருகிறார்.
ஹேப்பி பர்த்டே ஜெயம் ரவி: ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவி 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தார். இன்று அவர் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு மகன்களும் இனிமேல் அப்பாவுடன் இருப்பார்களா? அல்லது அம்மாவுடன் இருப்பார்களா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

பிரதர் ஆடியோ லாஞ்ச்: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக மாறிய ராஜேஷ். எம் அதன் பின்னர் மிஸ்டர் லோக்கல், ஆல் இன் ஆல் அழகுராஜா, கடவுள் இருக்கான் குமாரு என சொதப்பல் படங்களை கொடுத்து வந்தார். கடைசியாக ஹன்சிகாவை வைத்து மை3 எனும் வெப்சீரிஸை அவர் இயக்கினாலும், அதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள அந்த படத்தின் ஆடியோ மற்றும் டீசர் லாஞ்ச் வரும் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என ட்வீட் போட்டுள்ளார் ஜெயம் ரவி.
பிரதர் க்ளிம்ஸ்: "எல்லாரும் நான் சாப்பிடும் போது அப்படி பார்க்காதீங்க.. எனக்கு ஒருமாதிரி கூச்சமாக இருக்கு" என ஜெயம் ரவி சொல்ல அவரை பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பார்க்கும் க்ளிம்ஸ் காட்சியையும் ஜெயம் ரவி ஷேர் செய்துள்ளார்.
ரசிகர்கள் ஆறுதல்: எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம், ஹேப்பியா இருங்க அண்ணா, நீங்க நல்லவரு, உங்களுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும், எப்போதும் உங்களுடன் நாங்க இருப்போம் என அவரது ரசிகர்கள் ஜெயம் ரவிக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











