மணியின் "பொன்னியின் செல்வன்" படத்தில் அப்பா - மகனுக்கு வாய்ப்பு
Recommended Video
சென்னை : மணிரத்தினத்தின் அடுத்த திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிகர்கள் ஒவ்வொருவராக தேர்ந்தேடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தமிழ் இலக்கிய கதையில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது.
ஐஸ்வர்யா ராய் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகிவியிட்டது. மேலும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில் ஒரு ஸ்டார் ஹீரோவின் மகனும் இப்படத்தில் புதிதாக தேர்ந்தேடுக்க பட்டுள்ளார். அது தான் நடிகை ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி. ஆரவ் ஏற்கனவே டிக் டிக் டிக் படத்தில் அறிமுகமாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 12 தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட விருக்கிறது. இந்த வயதிலேயே ஆரவ்விற்கு மணிரத்தினம் படத்தில் அதுவும் வரலாற்று சிறப்பு மிக்க இலக்கிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். ஆல் தி பெஸ்ட் ஆரவ்!!!


Click it and Unblock the Notifications











