ஜெயம் ரவியின் அகிலன் முதல் நாள் வசூல்.. வேட்டையாடியதா... கோட்டைவிட்டதா?
சென்னை : ஜெயம் ரவி கேங்ஸ்டராக நடித்துள்ள அகிலன் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியான நிலையில், அப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், தருண் அரோரா, ஜிராக ஜானி ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவியுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

ஜெயம் ரவியின் அகிலன்
அகிலன் திரைப்படம் நேற்று 500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அகிலன் திரைப்படத்தில் ஜெயம் ரவி அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டர் வேலை செய்யும் இவர், கள்ள கடத்தல், ஆள்கடத்தல், துறைமுகத்தில் அகிலன் தான் எல்லாமே என்று பெயர் எடுத்துவிடுகிறார்.

படத்தின் கதை
கடலில் நடக்கும் கடத்தல், கொள்ளை என அனைத்திற்கும் பின்னால், தலைவனாக கபூர் இருக்கிறார் என்பதை தெரிந்த கொண்ட அகிலன் எப்படியாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு பக்கம் போலீஸ் அகிலனை கைது செய்ய நினைக்க, மறுபக்கம் அகிலன் கபூரை சந்திக்க முயற்சி செய்ய இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

கோட்டை விட்டார்
அகிலன் படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு, பாடி லாங்குவேஜ், வசனம் என அனைத்தும் சூப்பர் இருந்தாலும், பல இடங்களில் இயக்குநர் கோட்டை விட்டுள்ளார். படம் மொத்தத்தையும் சுற்றி சுற்றி கடல், துறைமுகம், கண்டைனர் என பார்த்து பார்த்து ஒருகட்டத்தில் அலுப்பு வந்துவிட்டது. சாம் சிஎஸ்சின் பின்னணி இசை அருமை, இருப்பினும் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே வைத்து ரசிகர்களை டென்ஷனாக்கி உள்ளார்.

முதல் நாள் வசூல்
அகிலன் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் சிறப்பாக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகிலன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் 1.70 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. முதல் நாளில் 3 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் இதுமிகவும் குறைவுதான். இருந்தாலும், அண்மையில் வெளியான அயோத்தி மற்றும் பகாசுரன் படங்களுடன் ஒப்பிடும் போது இது மிகப்பெரிய வசூலாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











