ஜெயம்ரவி, கீர்த்திசுரேஷ், ஜிவி பிரகாஷ்… புதிய கூட்டணியில் ரசிகர்களை அலறவிடும் ‘சைரன்’ மோஷன் போஸ்டர்

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

தற்போது எம். ராஜேஷ் இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் 31வது படத்தின் மோஷன் போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது.

புதிய உற்சாகத்தில் ஜெயம் ரவி

புதிய உற்சாகத்தில் ஜெயம் ரவி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில், அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ளா இந்தப் படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளதால், ஜெயம் ரவி ரொம்பவே உற்சாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் நடித்துள்ள 'அகிலன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

புதிய படங்களில் பிஸி

புதிய படங்களில் பிஸி

பொன்னியின் செல்வன், அகிலன் என இரண்டு படங்களில் வெளியீட்டுக்காக காத்திருக்கும் ஜெயம் ரவி, அடுத்ததாக எம் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, ஊட்டியில் நிறைவடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அஹம்மது இயக்கும் புதிய படத்திலும் ஜெயம் ரவி கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைரன் மோஷன் போஸ்டர்

சைரன் மோஷன் போஸ்டர்

இந்நிலையில், ஜெயம் ரவியின் 31வது படம் குறித்தும் சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு 'சைரன்' என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதனை படக்குழு மோஷன் போஸ்டருடன் தற்போது அறிவித்துள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும், அனுபமா பரமேஸ்வரனும் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

எப்படி இருக்கிறது மோஷன் போஸர்

எப்படி இருக்கிறது மோஷன் போஸர்

படத்தின் தலைப்புக்கேற்ப சைரன் ஒலித்தபடியே தொடங்கும் இந்த மோஷன் போஸ்டர், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. 'சைரன்' படத்தின் கதைக்களம், சஸ்பென்ஸ் திரில்லர் அல்லது க்ரைம் திரில்லர் ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜெயம் ரவியின் ஆக்சன் ட்ரீட்டையும் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். இந்நிலையில், தற்போது வெளியான 'சைரன்' படத்தின் மோஷன் போஸ்டரை, ஜெயம் ரவியின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X