சிம்புவைத் தொடர்ந்து ஜெயம் ரவியை இயக்கும் கவுதம் மேனன்
சென்னை: மிருதன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கவுதம் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தனி ஒருவன் படத்தின் வெற்றியால் இயக்குனர்களின் மனங்கவர்ந்த நாயகனாக மாறிவிட்டார் ஜெயம் ரவி. தற்போது மிருதன் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

மேலும் இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படத்திலும் நாயகனாக ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். மிருதன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்ததாக கவுதம் மேனனின் படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.
கவுதம் மேனன் - ஜெயம் ரவி இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கி அடுத்த வருடத்தில் முடிவடையும் என்று கூறுகின்றனர்.
விரைவில் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கவுதம் மேனன் சிம்புவை வைத்து இயக்கி வரும் இது நம்ம ஆளு திரைப்படம் இன்னும் ஒருசில தினங்களில் முடிவடைந்து விடும்.
இதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் வேலைகளை தொடங்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











