பூலோகம் இயக்குனருடன் ஜெயம் ரவி இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை: நடிகர் ஜெயம்ரவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியன் செல்வனில் தற்போது நடித்து வருகிறார்

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் ஜெயம் ரவி ஜன கன மன என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் தற்போது நடித்து வருகிறார்

இந்த நிலையில் பூலோகம் இயக்குனர் என் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி மீண்டும் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரமாண்ட தயாரிப்பில்

பிரமாண்ட தயாரிப்பில்

கோமாளி கொடுத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 25வது படமாக வெளியான பூமி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. விவசாயத்தை மையப்படுத்தி வெளியான இந்தப்படம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவி அடுத்ததாக ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்க இப்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகிவரும் பொன்னியன் செல்வனில் நடித்து வருகிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஜெயம்ரவி அருள்மொழிவர்மனாக நடித்து வருகிறார்

ஜெயம் ரவி பாக்ஸராக

ஜெயம் ரவி பாக்ஸராக

ஒரே மாதிரி படங்களை கொடுக்காமல் ரசிகர்களுக்கு புது புது ரசனைகளின் படங்களை வழங்கிவரும் ஜெயம் ரவி அடுத்ததாக ஜனகனமன என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவி பூலோகம் இயக்குனர் என் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் மீண்டும் இணைய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானது அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி பாக்ஸராக நடித்த திரைப்படம் பூலோகம் வடசென்னையில் வாழ்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பூலோகம் திரைப்படம் மிகத் தாமதமாகவே வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ஜெயம்ரவி முரட்டுத்தனமாக குத்து சண்டை வீரராக நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார். அந்தப் படத்தை இயக்குனர் என் கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் என் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி இணைய உள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அகிலன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இதில் ஜெயம்ரவி கப்பலில் பணிபுரியும் ஊழியராக நடித்து வருகிறார்.

அகிலன்

அகிலன்

நடுக்கடலில் கப்பலில் நின்று கொண்டு கொக்கியை பிடித்தவாறு ஜெயம் ரவி நின்று கொண்டிருக்கின்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.இந்தியப் பெருங்கடலின் ராஜா என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து இருக்க சாம் சி எஸ் அமைக்கிறார். பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயம் அகிலன் மிரட்டலான போஸ்டர் வெளியாகி இப்பொழுது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X