Jayam Ravi: ஜன கண மன படத்துக்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்த ஜெயம் ரவி... எல்லாம் இதுக்காக தான்!

சென்னை: அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக கமிட்டான திரைப்படம் ஜன கண மன.

ஜெயம் ரவியுடன் டாப்ஸி, அர்ஜுன், ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 2019ல் தொடங்கியது.

ஆனால், அதன்பின்னர் ஜன கண மன படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே ட்ராப் ஆனது.

இந்நிலையில், இந்தப் படத்தை ஜெயம் ரவி-அஹமது கூட்டணி மீண்டும் கையில் எடுத்துள்ளதாம்.

 Jayam Ravi To Resume Shooting For His Long-Delayed Film Jana Gana Mana

மீண்டும் ஜன கண மன ஷூட்டிங்:வாமனன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஹமது. தொடர்ந்து என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களையும் இயக்கினார். அதன்பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து ஜன கண மன திரைப்படத்தை தொடங்கினார் அஹமத். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு 2019ம் ஆண்டு தொடங்கியது.

ஜெயம் ரவியுடன் டாப்ஸி, அர்ஜுன், ரஹ்மான், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். 2019ல் பெங்களூருவில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதியிலேயே ட்ராப் ஆனது. கொரோனா லாக் டவுனுக்குப் பின்னர் ஜன கண மன படப்பிடிப்பை தொடராமல் இறைவன் படத்தை தொடங்கியது இந்தக் கூட்டணி.

அஹமது இயக்கத்தில் உருவாகும் இறைவன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா கமிட்டானார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜன கண மன படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடர படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன்படி, வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடரும் என சொல்லப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாகவே பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாகிவிட்டார் ஜெயம் ரவி. இந்தப் படம் ஜெயம் ரவிக்கு நல்ல கம்பேக் கொடுத்தாலும், அதனைத் தொடர்ந்து வெளியான அகிலன் படுதோல்வியடைந்தது. இதனால், இனி அடுத்தடுத்து மற்ற படங்களில் கவனம் செலுத்த முடிவெடுத்துவிட்டாராம். அதன்படி முதலில் ஜன கண மன படத்தை முடிக்க ஜெயம் ரவி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக மொத்தமாக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகும் ஜன கண மன ரசிகர்களுக்கு செம்ம ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஜெயம் ரவி, டாப்ஸி, ரஹ்மான், அர்ஜுன் ஆகியோர் சீக்ரெட் ஏஜெண்டாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஜெயம் ரவிக்கு இந்தப் படம் இன்னொரு அடையாளத்தை கொடுக்கும் என தீவிரமான நம்பிக்கையில் உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X