'இரும்புத்திரை' பிரபலத்துடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி...29 வது பட அப்டேட்

சென்னை : ஜெயம் ரவி கடைசியாக 'பூமி' படத்தில் நடித்திருந்தார். இது ஜெயம் ரவியின் 25 வது படமாகும். இந்த படத்தை லட்சுமண் எழுதி, இயக்கி இருந்தார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பேனரில் சுஜாதா விஜயக்குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.

தொடர்ந்து டைரக்டர் அகமது இயக்கும் 'ஜன கன மன' படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்தில் டாப்சி பன்னு ஹீரோயினாக நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் முக்கிய கேரக்டரில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

JAYAM RAVI TO TEAM UP WITH THIS IRUMBU THIRAI FAME FOR HIS NEXT

சமீபத்தில் ஐதராபாத்தில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பை முடித்து திரும்பிய ஜெயம் ரவி, 'பூலோகம்' படத்தை இயக்கிய டைரக்டர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் த்ரில்லர் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் ஜெயம் ரவியின் 29 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'இரும்புத்திரை' படத்திற்கு கதை எழுதிய ஆன்டனி முதல் முறையாக இயக்கும் படம் ஒன்றில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தையும் ஹோம் மூனி மேக்கர்ஸ் பேனரில் சுஜாதா விஜயக்குமார் தயாரிக்க உள்ளார். ஜூலை மாத இறதியில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X