யோகிபாபு பிஸி.. கால்ஷீட் கிடைக்கல.. 3 மாதம் வீட்டில் சும்மா இருந்தேன்.. ஜெயம் ரவி !
Recommended Video
சென்னை : கோமாளி படப்பிடிப்பின் போது யோகிபாபு பிஸியாக இருந்ததால் இவரின் கால்ஷீட் கிடைக்கவில்லை, அதனால் மூன்று மாதங்கள் வீட்டிலே இருந்தேன் என்று ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே . இவர் கடைசியாக கோமாளி படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் இவருக்கு பல விருதுகள் தற்போது கிடைத்து வருகிறது .

கோமாளி படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார் . இந்த படம் தான் தயாரிப்பாளர் ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய பெயரை சம்பாதித்து தந்தது என்றே சொல்லலாம். இதற்கு முன் இவர்கள் தயாரித்த எல்.கே.ஜி படம் நல்ல வெற்றியை பதிவு செய்து இருந்தாலும் கோமாளி படம் அனைத்து விதத்திலும் படத்திற்கு வெற்றியை பதிவு செய்திருந்தது .
இந்த படத்தில் பள்ளி மாணவன் கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டார் ஜெயம்ரவி. உடலளவில் மிகவும் கடினப்பட்டு உடம்பை குறைத்ததாக கூறினார். அந்த பயணம் மிகவும் கடினமாக இருந்தது. தற்போது கொடுக்கப்படும் பாராட்டுகள் அனைத்தையும் மறக்க வைத்துவிட்டது என்று சமீபத்தில் ஜெயம்ரவி கூறியிருந்தார்.

மேலும் கோமாளி படத்தில் ஜெயம்ரவிக்கு அடுத்தாக நம்மை வெகுவாக கவர்ந்தது யோகிபாபு தான், அந்த அளவுக்கு தனது சிறந்த நகைச்சுவை நிறைந்த நடிப்பையும் நல்ல குணசித்திர நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார் .
யோகிபாபு பிஸியாக நடித்து வரும் நடிகர். இவரின் கால்சீட் படத்தின் போது கிடைக்கவில்லை என்பதனால் ஜெயம்ரவி இவருக்காக மூன்று மாதங்கள் வீட்டில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாம் .

கோமாளி படம் 2019 ஆகஸ்ட் மாதம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது . இந்த படத்தின் இயக்குனர் தனது முதல் படத்திலே நல்ல வெற்றியை பதிவு செய்ததால் தயாரிப்பாளர் இயக்குனருக்கு கார் பரிசாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது .
நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் படங்களை இயக்கிய இயக்குனர் லஷ்மன் இயக்கி வருகிறார். இது ஜெயம் ரவியின் 25 வது படமாகும்.மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.


Click it and Unblock the Notifications











