Jayam Ravi Wife: விஜயலக்ஷ்மி, விஜே ரம்யா.. ஆர்த்தி ரவியின் லேடீஸ் பார்ட்டியில்.. இத்தனை பிரபலங்களா?
சென்னை: ராஜ ராஜ சோழனாக கணவர் ஜெயம் ரவி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவியும் மினி செலிபிரிட்டியாகவே மாறி வருகிறார்.
பொன்னியின் செல்வன் 2 ப்ரீமியர் ஷோக்களில் நடிகைகளுடன் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் ஹக் செய்துக் கொண்டு ஹேப்பியாக சிரித்து பேசிய ஆர்த்தி ரவி தற்போது பல சினிமா பிரபலங்கள் உடன் சேர்ந்து கேர்ள்ஸ் பார்ட்டி ஒன்றை நடத்தி உள்ளார்.

அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நிலையில், ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
பூப்போட்ட கவுனில் ஜெயம் ரவி மனைவி: பொன்னியின் செல்வன் படத்தில் சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என நடிகர் ஜெயம் ரவிக்கு இரண்டு ஜோடிகள் இருந்தாலும், எந்தவொரு சண்டையும் போடமல் சக நடிகைகளே பொறாமை கொள்ளும் பேரழகுடன் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராம் குயினாகவே மாறி வருகிறார்.

பூப்போட்ட கவுனை அணிந்து கொண்டு ராயல் குயினாக கலக்கல் போஸ் கொடுத்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பகக்த்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார்.
பார்ட்டி வைத்த ஆர்த்தி ரவி: நடிகை விஜயலக்ஷ்மி, விஜே ரம்யா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றை ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி சமீபத்தில் வைத்துள்ளார். அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் ஆர்த்தி ரவி.

அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட பெண் பிரபலங்களுக்கு வித விதமான நான்வெஜ் உணவுகள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஓவியத் திறமையை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் அனைவரையும் ஓவியம் வரைய வைத்திருக்கிறார் ஆர்த்தி ரவி.
ஹீரோயின் ஆகிடுங்க: ஆர்த்தி ரவியின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள் நீங்களே ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கலாம். சோபிதா துலிபாலாவுக்கு பதிலாக பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நீங்களே நடித்திருக்கலாம் இன்னமும் நல்லா இருந்துக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.






Click it and Unblock the Notifications











