விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி மனைவி.. லேட்டஸ்ட்டாக வெளியிட்ட செம போஸ்ட்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக சோஷியல் மீடியாவில் சில விஷமிகள் வதந்திகளை பரப்பி வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்தி ரவி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து பிரிந்து வரும் நிலையில், முன்னணி நடிகர் ஆன ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக நேற்று மாலை முதல் திடீரென சிலர் கொளுத்தி போட்டு வதந்தி காட்டுத்தீ போல பரவியது.

Jayam Ravi Aarti Ravi divorce Kathalikka Neramillai Genie Brother

ஆனால், அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு உள்ளது ஜெயம் ரவி ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷ் முதல் ஜிவி பிரகாஷ் வரை: சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், அடுத்ததாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து விவாகரத்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் ஜெயம் ரவியும் விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன.

ஜெயம் ரவி விவாகரத்து?: நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெயம் ரவிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆர்த்தி ரவியின் அம்மா ஹோம் மூவி மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடைசியாக ஜெயம் ரவி நடித்த 'சைரன் 108' திரைப்படத்தையும் ஆர்த்தி ரவியின் அம்மா தான் தயாரித்தார். அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள படத்தையும் அவர்தான் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் ஜெயம் ரவியின் குடும்ப வாழ்க்கையில் குண்டை தூக்கி போட்டது போல விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் வெளியான நிலையில், உடனடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆர்த்தி ரவி.

ஆர்த்தி ரவி போஸ்ட்: ஜெயம் ரவி மோகன் ராஜா இயக்கத்தில் ஹீரோவாக நடித்த ஜெயம் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அந்தப் படத்தின் போஸ்டர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ளார். மேலும், "காதல் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை" என்கிற வசனத்தை குறிப்பிட்டு அவர் பதிவிட்டு இருப்பது ஹேட்டர்களுக்கு சரியான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

Jayam Ravi Aarti Ravi divorce Kathalikka Neramillai Genie Brother

ஏகப்பட்ட படங்கள்: ஜெயம் ரவி சினிமாவில் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையிலும் அதே அளவுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறார். ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை என பல படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. மேலும், தனி ஒருவன் 2 மற்றும் கார்த்திக் தங்கவேலு படம் என பல படங்கள் லைன் கட்டி காத்திருக்கின்றன. நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இருவருமே சிறந்த ஜோடிகளாக பல ஆண்டுகள் வெற்றிகரமாக திருமண வாழ்க்கையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X