Jayam Ravi: வாவ்.. 2 பசங்களும் எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க.. ஜெயம் ரவி செம டஃப் கொடுக்கிறாரே!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தாய்லாந்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுளார். ஹாஃப் டவுசர் அணிந்து கொண்டு பசங்களுக்கு போட்டியாக சின்ன பையனாக மாறி ஜெயம் ரவி செய்த சேட்டைகளையும் மனைவி ஆர்த்தி ரவி வெளியிட்டு அவரது ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 என பெரிய வெற்றியை ருசித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த படத்தை தவிர்த்து ஜெயம் ரவி சோலோவாக நடித்த அகிலன் மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்கள் கடந்த ஆண்டு படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில், இந்த ஆண்டு வரிசையாக 3 படங்கள் ஜெயம் ரவிக்கு வெளியாக காத்திருக்கின்றன.

யானை பாகன்: மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அந்தப்படத்தில் ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தனர். இலங்கையில் அருள்மொழிவர்மன் யானைப் பாகனாக மறைந்து வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் தாய்லாந்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஜெயம் ரவி யானையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு யானைப்பாகன் என கமெண்ட் போட்டுள்ளார்.

2 பசங்களும் வளர்ந்துட்டாங்களே: கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தில் அவரது மூத்த மகன் ஆரவ் சினிமாவில் அறிமுகமானார். குறும்பா பாடல் குழந்தைகளை வெகுவாக கவர்ந்திருந்தது. அந்த படம் வெளியாகி ஐந்து ஆண்டுகளில் தற்போது ஆரவ் நல்லாவே வளர்ந்து விட்டார். இரண்டாவது மகனான அயானும் சூப்பராக வளர்ந்துள்ள நிலையில், அவர்களது குடும்ப புகைப்படத்தை ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ளார்.

அரை டவுசருடன் ஜெயம் ரவி: தனது மகன்களுக்கு போட்டியாக ஹாஃப் டவுசர் அணிந்து கொண்டு ஜெயம் ரவி குழந்தைகளுடன் குறும்புத்தனமாக தாய்லாந்து விடுமுறையைக் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அந்த போட்டோக்களுக்கு லைக்குகளை போட்டு வருகின்றனர்.

கைவசம் பல படங்கள்: கடந்தாண்டு டிசம்பர் மாதமே ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் ஒரு பிப்ரவரி மாதம் லால் சலாம் படத்துக்கு போட்டியாக அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்கா மோகனுடன் இணைந்து பிரதர், மூன்று இளம் கதாநாயகிகளுடன் இணைந்து பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ஜீனி, அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள தனி ஒருவன் 2 என வரிசையாக பல படங்கள் ஜெயம் ரவி கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்ரியனுக்கு சாவே கிடையாது: சமீபத்தில் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி "சத்ரியனுக்கு சாவே கிடையாது" என்றும் நடிகர், அரசியல்வாதி என்பதை எல்லாம் தாண்டி விஜயகாந்த் எந்தளவுக்கு ஒரு நல்ல மனிதர் என்பது குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் வைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











