Kamal 234 - கமல் ஹாசனுடன் இணையும் ஜெயம் ரவி?.. மணிரத்னம் பட புதிய தகவல் என்ன தெரியுமா?

சென்னை: Jayam Ravi (ஜெயம் ரவி) கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

கமல் ஹாசன் என்றாலே உழைப்பு, வித்தியாசம், புதுமை என்று பெயர் எடுத்தவர். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையையோ, வித்தியாசத்தையோ இடம்பெற செய்துவிடுவார். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்வார்கள்.

 Jayam Ravi Will Act in Kamal Haasan Maniratnam Movie

இயக்கத்திலும் புதுமை: நடிப்பு மட்டுமின்றி அவர் இயக்கிய விருமாண்டி, ஹேராம் ஆகிய படங்களும் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக இருக்கின்றன. குறிப்பாக விருமாண்டி படத்தின் திரைக்கதை புதுமையிலும் புதுமையாக இருந்தது. ஒரே கதையை இரண்டு பேர் தங்களது பார்வையில் விவரிக்கும் மாயாஜாலத்தை முதல்முதலில் திரையில் நிகழ்த்திக்காட்டியவர் கமல் ஹாசன்.

கமலின் கம்பேக்: நடிப்பிலிருந்து ஒதுங்கி அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் கமலின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் உலக நாயகனின் நடிப்பு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

க்ளாசிக் கூட்டணி: விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்.அந்தவகையில் படங்களை தயாரிக்கவும் செய்யும் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஹெச்.வினோத் - கமல் படம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனின் அடுத்தடுத்த படங்களில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருப்பது அவரும் மணிரத்னமும் இணையும் படம்தான். ஏற்கனவே இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத க்ளாசிக்காக நாயகன் படத்தை கொடுத்தனர். எனவே இந்தப் படத்தின் மீதான ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. தற்போது திரைக்கதை எழுதும் பணியில் மணிரத்னம் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

படத்தில் யார் யார்?: இந்தச் சூழலில் இருவரும் இணையும் படத்தில் சிம்பு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அண்மையில் வெளியான தகவலின்படி சிம்பு நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜெயம் ரவி முக்கியமான ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே பிரபாஸ் நடிக்கும் கல்கி ஏடி 2898 படத்தில் வில்லனாகவும் கமல் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X