Jayam Ravi: வில்லேஜ் ஸ்பெஷலிஸ்ட் இயக்குநருடன் இணையும் ஜெயம் ரவி... ராஜராஜசோழனுக்கு இது தேவையா?
சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தில் அருண்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தற்போது பக்கா வில்லேஜ் ஸ்பெஷலிஸ்ட் இயக்குநர் ஒருவருடன் ஜெயம் ரவி இணைவது உறுதியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் புதிய கூட்டணி:ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவி, இன்று கோலிவுட்டின் ராஜராஜசோழனாக வலம் வருகிறார். எம் குமரன், உனக்கும் எனக்கும், பேராண்மை, தனி ஒருவன், டிக் டிக் டிக் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அவரது கேரியரின் உச்சமே பொன்னியின் செல்வன் படம் எனலாம்.
முன்னதாக பொன்னியின் செல்வன் படம் உருவாகியிருந்தால், அதில் எம்ஜிஆர், கமல், மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கவிருந்த ராஜராஜ சோழன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அருண்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழன் கேரக்டரில் ஜெயம் ரவி பக்காவாக பொருந்திப் போனார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் வெளியாகிறது. இதனையடுத்து ஜெயம் ரவிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நயன்தாராவுடன் இணைந்து இறைவன், சைரன் உட்பட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் ஒரு படத்திலும் ஜெயம் ரவி கமிட் ஆகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னொரு இயக்குநர் உடனும் ஜெயம் ரவி கூட்டணி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
எப்போதுமே கொஞ்சம் ராயலான அல்லது சிட்டி கெட்டப் பின்னணி கொண்ட கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த ஜெயம் ரவி, இந்த முறை பக்கா வில்லேஜ் ஹீரோவாக களமிறங்கவுள்ளாராம். அதற்காக வில்லேஜ் ஸ்பெஷலிஸ்ட் இயக்குநரான முத்தையாவுடன் அவர் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. கொம்பன், மருது, விருமன் ராவான வில்லேஜ் படங்கள் இயக்கி பிரபலமானவர் முத்தையா.

தற்போது ஆர்யா நடிப்பில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தான் ஜெயம் ரவியின் படத்தை இயக்கவுள்ளாராம் முத்தையா. இந்தக் கூட்டணி குறித்த அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி, முத்தையா கூட்டணியில் உருவாகும் படத்தை ஸ்க்ரீன் சீன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 பட ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார் ஜெயம் ரவி. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் செம்ம மாஸ்ஸாக வலம் வரும் ஜெயம் ரவிக்கு, ரசிகர்கள் மத்தியில் தற்போது கிரேஸ் அதிகமாகியுள்ளது. இதனால் அவரது அடுத்த படம் குறித்த அப்டேட்ஸ் எப்போது வரும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் தான் ஜெயம் ரவியும் இயக்குநர் முத்தையாவும் இணைவதாக தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











