Brother: செய்த தியாகம் எல்லாம் வீணாப்போச்சு..விரக்தியில் ஜெயம் ரவி.. பாவம் அவருக்கு நேரமே சரியில்ல!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படம் தீபாவளி பாண்டிகைக்கு தியேட்டரில் வெளியானது. இப்படம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக ஜெயம் ரவி பல தியாகம் செய்திருக்கிறார். ஆனால், அவை அனைத்தும் வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
வெட்டு குத்து, அடிதடி, ரத்தம் என பார்த்து பழகிப்போனவர்களுக்கு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படம் சற்று வித்தியாசமான படமாக இருந்தது எனலாம். இப்படத்தில் வழக்கறிஞர் படிப்பை முடிக்காவிட்டாலும் எதற்கெடுத்தாலும் 'லா பாயின்ட்' பேசும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். வீட்டுக்கு அடங்காமல் இவர் செய்யும் சேட்டையால் மொத்த குடும்பத்திற்குமே பிரச்சினை வருகிறது. இதனால்,அவரைத் திருத்துவதற்காக, ஊட்டியில் இருக்கும் அக்கா பூமிகா வீட்டிற்கு ஜெயம் ரவியை அனுப்பி வைக்கின்றனர்.

பிரதர் திரைப்படம்: ஆனால், அக்கா குடும்பத்திலும் சும்மா இல்லாமல் வேலையை காட்டிவிடுகிறார் ஜெயம் ரவி. இதனால், அக்கா குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டு, அக்கா கணவரை விட்டு பிரிந்து விடுகிறார். இதனால், கார்த்தியை எல்லோரும் வெறுக்கிறார்கள். அப்போது தன்னை பற்றிய உண்மை ஒன்று தெரிய வருகிறது அவருக்கு. இதையடுத்து பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து, நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்கிறார் கார்த்தி. அதில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதுதான் கதை.
ஏமாற்றமே மிஞ்சியது: ராஜேஷின் படத்திற்கு எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால், இப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. ஒருவேளை பிரதர் படம் வெறு ஒரு தேதியில் வெளியாகி இருந்தால், ஓரளவிற்காவது வசூலை பெற்று இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஜெயம் ரவி செய்த தியாகம்: பிரதர் படம் வெளியாவதில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் படம் வெளியாகுமா ஆகாதா என படக்குழு என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்த நேரத்தில், ஜெயம் ரவி தானாக முன்வந்து பண உதவி செய்து படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்து இருக்கிறார். எப்படியாவது படம் வெளியாக வேண்டும் என்று ஜெயம் ரவி தியாகம் செய்த போதும், அவை வீணாகி விட்டதால், ஜெயம் ரவி விரக்தியில் இருக்கிறார். ஏற்கனவே விவாகரத்து பிரச்சனையால் மன வேதனையில் இருக்கும் ஜெயம் ரவி, பிரதர் படத்தின் தோல்வியால் மீண்டும் மன வேதனையில் இருக்கிறார்.
விரக்தியில் ஜெயம் ரவி: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வசூலை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான இறைவன் மற்றும் சைரன் ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த ஜெயம் ரவி, பிரதர் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். ஆனால், இந்தப்படமும் தோல்வி அடைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











