58 வயதில் மனைவியையே மறுமணம் செய்த ஜெயம் ரவி பட வில்லன்.. கல்யாணத்துல கொடுத்தாரு பாருங்க ஒரு கிஸ்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரோனித் ராய் 58 வயதில் தனது மனைவியையே மீண்டும் திருமணம் செய்து கொண்டது பாலிவுட்டில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அமீர் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் இரண்டு முறை திருமணம் செய்து இரண்டு முறையும் விவாகரத்து செய்து விட்ட நிலையில், இந்த வில்லன் நடிகர் என்ன இப்படி வித்தியாசமானவராக இருக்காரே என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

1989ம் ஆண்டு ராம் லக்கான் எனும் இந்தி படத்தில் உதவி இயக்குநராக இருந்த ரோனித் ராய் 92ம் ஆண்டு ஜான் தெரே நாம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்த ரோனித் ராய் பல படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டி உள்ளார்.

Jayam Ravis Bhoomi villain Ronit Roy re marries his wife after 20 years

ஜெயம் ரவி பட வில்லன்: பாலிவுட்டில் பல படங்களில் ஹீரோவாகவும் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் ரோனித் ராய் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் வெளியான பூமி படத்தில் வில்லனாக நடித்திருப்பார். ஹெலிகாப்டரில் இருந்து அவர் இறங்கி வந்து உலகில் உள்ள அனைத்து வியாபாரங்களையும் எங்க குடும்பத்தை சேர்ந்தவங்க மட்டும் தான் பண்ணனும் என சொல்லி மிரட்டும் காட்சிகள் எல்லாம் தெறியாக இருக்கும்.

58 வயதில் இப்படியொரு விசேஷம்: பொதுவாக நம்ம ஊரில் எல்லாம் 60 வயதானால் 60ம் கல்யாணம் செய்யும் வழக்கம் உண்டு. இந்நிலையில், 58 வயதாகும் ரோனித் ராய் தனது மனைவி ஜோன்னா நீலம் என்பவரை திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு திருமண நாளில் மீண்டும் திருமணம் செய்து கோலாகலமாக விழா நடத்தி பாலிவுட் பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் விருந்து போட்டுள்ளார்.

மறுபடியும் கல்யாணம் பண்ணிப்பியா: ரோனித் ராய் கடந்த 2003ம் ஆண்டு ஜோன்னா நீலம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ள கோவாவில் உள்ள கோயிலில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த ரோனித் ராய் தனது மனைவியிடம் Will You Marry Me Again என போஸ்ட் போட்டு கேட்டிருந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

அக்னி சாட்சியாக: கோவாவில் உள்ள கோயிலில் அக்னி சாட்சியாக ஐயரை எல்லாம் வைத்து முதல் திருமணத்தை எப்படி செய்து கொண்டனரோ அதே போல 20 ஆண்டுகள் கழித்தும் திருமணம் செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் தீயாக பரவி வருகின்றன. திருமணக் கோலத்தில் ரோனித் ராய் மற்றும் அவரது மனைவி நீலம் இருக்கும் காட்சிகளை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் எங்களுக்கு ரொம்ப பொறாமையா இருக்கு என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Jayam Ravis Bhoomi villain Ronit Roy re marries his wife after 20 years

லிப் லாக் கிஸ்: கோயிலில் திருமணம் முடிந்த கையோடு மனைவிக்கு அன்பு முத்தங்களை உதட்டிலேயே பரிசாக அளித்தார் ரோனித் ராய். பாஸ், 2 ஸ்டேட்ஸ், அக்லி, தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான், பிளடி டாடி, கும்ரா உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இளம் வயது நடிகர்களே பொசுக்குன்னு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து வரும் காலக்கட்டத்தில் 20 வருஷத்துக்கு பிறகு தனது மனைவியை ஹேப்பியாக வைத்துக் கொள்ள மீண்டும் திருமணம் செய்திருக்கிறாரே ரோனித் என பாலிவுட்டில் பலரும் இவரை பற்றித்தான் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X