இறைவன் படத்தில் நிறைய கெட்டவார்த்தை.. குழந்தைகளோடு வராதீங்க.. விளக்கம் கொடுத்த ஜெயம் ரவி!
சென்னை: ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் படம் 28ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படம் பார்க்க குழந்தைகளோடு வர வேண்டாம் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்
ஜெயம் ரவி கதாநாயகநாக நடித்துள்ள படம் இறைவன். இப்படத்தில், நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தனி ஒருவன் படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இப்படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்.
அஹமத் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஜெயம் ரவி: இறைவன் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் இத்திரைப்படம் வரும் 28ந் தேதி வெளியாக உள்ளது. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்கு தணிக்கை குழுவால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏ சான்றிதழ்: 2 மணி நேரம் 33 நிமிடங்கள் ஓடும் படத்தில் இரண்டு இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளை நீக்கவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கட்சிகளை நீக்கிவிட்டால் படத்தில் சுவாரசியம் இருக்காது என்பதால், படக்குழு அதை நீக்க முன்வராததால் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி விளக்கம்: இது குறித்து பேசிய ஜெயம் ரவி, என் படங்கள் எப்போதும் ஃபேமிலி ஆடியன்ஸ்களை கவரும் வகையில் தான் இருக்கும், ஆனால் இறைவன் படத்தை மட்டும் குழந்தைகளோடு சேர்ந்து வந்து பார்க்க வேண்டாம் எனவும், இதன் பிறகு நடிக்கும் எல்லா படங்களுமே குழந்தைகள் பார்க்கும் வகையில் தேர்வு செய்து நடிக்கிறேன்.
கில்லர் கொலை: இறைவன் படத்தின் கதை சந்தோஷத்திற்காக கொலை செய்யும் சைக்கோ கில்லரை கண்டுபிடிப்பது.இதில் அந்தக் கில்லர் கொலை செய்யும் விதமும் அந்த பிணங்களை காட்சிப்படுத்தும் விதமும் கொடூரமாக வருகிறது என்பதால், தான் தணிக்கை குழு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது.
மேலும் அதில் இருக்கும் ஒரு சில கெட்ட வார்த்தைகளையும் நீக்க சொல்லி இருக்கிறார்கள். அதை நீக்கிவிட்டால் படத்தில் சுவாரஸ்யம் இருக்காது என்பது நன்றாக தெரிகிறது. அதனால் தான் ஏ சர்டிபிகேட் கிடைத்தாலும் பரவாயில்லை, படத்தின் கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











