Iraivan Trailer - ஜெயம் ரவியின் இறைவன்.. வெளியானது அட்டகாச ட்ரெய்லர்.. ரசிகர்கள் வரவேற்பு

சென்னை: Iraivan Trailer (இறைவன் ட்ரெய்லர்) அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் இறைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான ஜெயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். அதன் பிறகு ரவி நடித்த படங்களும் தொடர்ந்து ஹிட்டாகின.

Jayam Ravis Iraivan Movie Trailer Was Out Now

உச்சம் சென்ற ரவி: ஜெயம் ரவி தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் தெளிவாக இருப்பவர். அதனால்தான் அவரது கரியரில் பல வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவரது படங்களில் பல படங்கள் முக்கியமானதாக இருந்தாலும் பேராண்மை படம் அவைகளில் தனித்து தெரியும் ஒன்று. கம்யூனிஸ சித்தாந்தவாதியான ஜனநாதன் இயக்கத்தில் உருவான அந்தப் படம்தான் ரவியை முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தியது.

தனி ஒருவன்: அதேபோல் தனி ஒருவன் படம் ரவியின் கேரியரில் மிக மிக முக்கியமான படம். அதுவரை ஜெயம் ரவியை வைத்து ரீமேக் படங்களை மட்டுமே இயக்கிவந்த ராஜா முதல்முறையாக ரவிக்கென்று சொந்தமாக கதை எழுதினார். ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்த அந்தப் படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆனது. அதிலிருந்து ராஜாவின் கேரியரும் உச்சம் சென்றது எனலாம்.

Jayam Ravis Iraivan Movie Trailer Was Out Now

பொன்னியின் செல்வன்: இந்தச் சூழலில் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைக்காத வாய்ப்பு ஒன்று ஜெயம் ரவிக்கு கிடைத்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வனில் ரவி, அருண்மொழி சோழனாக நடித்திருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு அருமையாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.

இறைவன்: இதனையடுத்து அவரது நடிப்பில் இறைவன் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ.அகம்து இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜெயம் ரவியுடன் நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். வில்லனாக ஹிந்தி நடிகர் ராகுல் போஸ் நடித்திருக்கிறார்.

ட்ரெய்லர்: இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. சிறு குழந்தைகளை கொல்லும் ராகுல் போஸை காவல் துறை அதிகாரி ஜெயம் ரவி பிடிப்பதுதான் படத்தின் ஒன்லைன் என்று ட்ரெய்லரை பார்க்கும்போது புரிகிறது. த்ரில்லர் படத்துக்கு எப்படிப்பட்ட இசையை கொடுக்க வேண்டுமோ அப்படிப்பட்ட இசையை கொடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. செப்டம்பர் 28ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X