Jayam Ravi wife Aarthi: பிரசவ காலத்தில் ஜெயம் ரவி செய்த விஷயம்.. ஆர்த்தி பகிர்ந்த சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில்தான் தன்னுடைய என்ட்ரியை தமிழ் சினிமாவில் கொடுத்திருந்தார்.

சாக்லேட் பாயாக வலம் வந்த ஜெயம் ரவி, தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் இறைவன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இவர் தனது மனைவி ஆர்த்தியை கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Jayam ravis wife Aarthi shares interesting things about him

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின்மூலம் அறிமுகமானார். இந்தப் படம் இவர்கள் இருவருக்குமே சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் ஜெயம் ரவி கமிட்டாகி நடித்து வருகிறார். துவக்கத்தில் சாக்லேட் பாயாக வலம்வந்த இவர், அதிரடி ஆக்ஷன் படங்களிலும் நடித்து ரசிகர்களை என்டர்டெயின் செய்தார். தற்போது காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என கலந்துக்கட்டி நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்: இந்த ஆண்டிலேயே ஜெயம் ரவியின் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படமும் இந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படமும் ஜெயம் ரவிக்கு மிகச்சிறப்பாக அமைந்தன. இதில் டைட்டில் ரோலில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. மல்ட்டி ஸ்டார் படமாக வெளியான போதிலும் பொன்னியின் செல்வன் படங்கள் ஜெயம் ரவிக்கு மிகச்சிறப்பாக அமைந்தன.

இறைவன் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவி -நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இறைவன் படம் வெளியானது. நீண்ட நாட்களாக ரிலீஸ் தள்ளிப்போன இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியானது. ஆயினும் கலவையான விமர்சனங்களையே இந்தப் படம் பெற்றது. சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ராட்சசன் படத்தை போல மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆர்த்தி இன்டர்வியூ: ஜெயம் ரவி சொந்த வாழ்க்கையிலும் மிகச்சிறந்த கணவர் மற்றும் தந்தை என்று பெயர் பெற்றுள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை காதல் திருமணம் செய்துக் கொண்ட ஜெயம் ரவிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஆர்த்தி. இதனிடையே தன்னுடைய கர்ப்பகாலத்தில் தன்னுடைய கணவன் ஜெயம் ரவி தன்னை எப்படியெல்லாம் கவனித்துக் கொண்டார் என்பது குறித்து ஆர்த்தி சமீபத்திய பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

ஜெயம் ரவி அக்கறை: தன்னுடைய முதல் பிரசவத்தின்போது ஜெயம் ரவி தன்னுடன் இல்லை என்றும் தன்னுடைய பிரசவம் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே நடந்ததால் அவர் திட்டமிட்டபடி தன் அருகில் இருக்க முடியவில்லை என்றும் ஆர்த்தி கூறியுள்ளார். ஆனால் அவரது தொழில் அப்படி என்பதை தான் புரிந்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னுடைய கர்ப்பகாலத்தில் தன்னுடைய உடல்நிலை சரியில்லாமல் தான் வாந்தி எடுக்கும்போதெல்லாம் தன்னுடைய கைகளிலேயே அவர் பிடிப்பார் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

100க்கும் மேற்பட்ட மார்க்: இதுபோல அதிகமான விஷயங்களை ஜெயம் ரவி செய்துள்ளதாகவும் தன்னுடைய பக்கத்திலேயே இருக்கும் அவர், அதிகாலை 3 -4 மணிக்குக்கூட தான் பசிப்பதாக கூறினால், தனக்காக எழுந்து வருவார் என்றும் ஆர்த்தி தனது பேட்டியில் கூறியுள்ளார். தொடர்ந்து 5 மணிக்கு தூங்கிவிட்டு, சூட்டிங் கிளம்பி போவார் என்றும் ஆர்த்தி தெரிவித்துள்ளார். ஒரு கணவராக அவருக்கு 100ம்கும் மேற்பட்ட மதிப்பெண்களை தான் தருவேன் என்றும் உற்சாகத்துடன் பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X