புது இயக்குனர்கள் பயன்படுத்தும் நடிகராக ...தடம் பதித்து வரும் ஜெயம் எஸ்.கே.கோபி...

சென்னை: திரையரங்கு குத்தகைதாரராக திரையுலகிற்குள் நுழைந்து, விநியோகஸ்தராகவும், பின்னர் தயாரிப்பாளராகவும் முன்னேறி, நடிகராக தற்போது தனக்கென தனி பாணியில் தடம் பதித்து வருகிறார் ஜெயம் எஸ்.கே.கோபி.

காஞ்சனா 3 மூலம் ராகவா லாரன்ஸால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயம் எஸ்.கே.கோபி, திரௌபதி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான ருத்ரதாண்டவத்தில் படம் முழுவதும் வரும் காவல்துறை அதிகாரியாக மிகவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவரது நடிப்பு பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

 பத்து படங்களில்

பத்து படங்களில்

இதைத் தொடர்ந்து, அந்தகன், ஜகா, கோபி நயனார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்ட சுமார் பத்து படங்களில் ஜெயம் எஸ்.கே.கோபி தற்போது நடித்து வருகிறார். கனவே கலையாதே உள்ளிட்ட மூன்று வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.

 குணச்சித்திர நடிகராக அடையாளம்

குணச்சித்திர நடிகராக அடையாளம்

ருத்ரதாண்டவம் படத்தில் தன்னுடைய நடிப்பை பார்த்து நடிகர் ராதாரவி, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பாராட்டியதை மிகவும் பெருமையாக கருதுகிறார் . திரௌபதி, ருத்ரதாண்டவம், கனவே கலையாதே ஆகியவற்றில் காவல் அதிகாரியாக நடித்திருந்தாலும், வித்யாசமான பல கதாபாத்திரங்களிலும் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே

தன்னுடைய ஆசை என்று சமீபத்தில் கொடுத்த பேட்டிகளில் சொல்லி வருகிறார் . அதற்கேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜெயம் எஸ்.கே.கோபி.

 புதுப் புது முகங்களை

புதுப் புது முகங்களை

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பல புதிய முகங்கள் பல புதிய திறமைசாலிகள் நடிகர்களாக மாறி வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்து அசத்தி வருகின்றனர். இயக்குனர்களும் புதிய முக பாவங்களுடன் கூடிய புதுப் புது முகங்களை பயன்படுத்தத்தான் ஆசைப்படுகின்றனர். பிரபலமான நடிகர் என்பதைத் தாண்டி ஒரு புதிய நடிகர் வித்தியாசமான கதாபாத்திரம் மக்கள் மனதை மிகவும் ஈர்க்கிறது.

 சவாலான விஷயம்

சவாலான விஷயம்

குணச்சித்திர வேடங்களில் நாசர், பிரகாஷ்ராஜ், ரகுவரன், ராதாரவி ,எம்எஸ் பாஸ்கர் போன்ற பல நடிகர்கள் வெரைட்டியான பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தங்களை நிரூபித்து ஜெயித்தும் காட்டியுள்ளனர் .அப்படிப்பட்ட வாய்ப்புகள் எல்லா நடிகர்களுக்கும் அமைவதில்லை . கிடைத்த வாய்ப்பை எப்படி தக்க வைத்துக் கொள்வது அதில் எப்படி ஜெயிப்பது என்பது தான் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலான விஷயம். கோபி பல இயக்குனர்களின் படைப்புகளில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்து வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையுடன் சினிமா வட்டாரங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர் பொறுத்திருந்து பார்ப்போம் வரும் படங்களில் கோபி எப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் செய்யப்போகிறார் என்று. மனதில் நிற்கும் கதைகளும் கதாபாத்திரங்களும் மக்கள் என்றுமே மறப்பதில்லை .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X