twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேவஸ்தானமே குழப்பத்திற்குத் காரணம்: ஜெயமாலா

    By Staff
    |

    ஐயப்பன் கோவில் கருவறைக்குள் என்னை கோவில் நிர்வாகிகள்தான் கூட்டிச்சென்றனர். விதிறையை அவர்கள் மீறாமல் இருந்திருந்தால் இந்த சர்ச்சைஎழுந்திருக்காது என்று நடிகை ஜெயமாலா சபரிமலை கோவில் தேவஸ்தானம் மீதுபுகார் கூறியுள்ளார்.

    ஐயப்பன் கோவில் கருவறைக்குள் நுழைந்த சுவாமி விக்கிரகத்தைத் தொட்டுவணங்கினேன் என்று நடிகை ஜெயமாலா கூறியுள்ளது கேரளாவில் சர்ச்சையைக்கிளப்பியுள்ளது.

    இந்த விவகாரத்தை முதலில் ஆரம்பித்து வைத்தவரான ஜோதிடர் உண்ணிகிருஷ்ணபணிக்கரும், ஜெயமாலாவும் சேர்ந்து நாடகம் ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆனால் தான் கூறியதில் எந்த மாற்றம் இல்லை என்று ஜெயமாலா மீண்டும்கூறியுள்ளார். இதுதொடர்பாக பெங்களூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், இந்த தேவையற்ற சர்ச்சையினால் நான் மிகவும் வேதனைஅடைந்துள்ளேன்.

    இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்டு என்னை அமைதியாக வாழ விட வேண்டும்.கோவில் நிர்வாகம்தான் இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தி விட்டது.

    நான் கோவில் நிர்வாகத்திற்கு பேக்ஸ் மூலம் அனுப்பிய கடிதத்தை அவர்கள்தான்வெளிப்படுத்தி சர்ச்சையை கிளப்பியுள்ளனர். நான் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுஅனுப்பிய கடிதம் அது. அந்தக் கடிதத்தை வெளியிடக் கூடாது, உடனடியாக அழித்துவிட வேண்டும் என்று கோரியிருந்தேன்.

    ஆனால் அதை மீறி அவர்கள் வெளியிட்டுள்ளனர். உண்மையில் நெருக்கடியில் சிக்கிநான் கோவில் கருவறைக்குள் செல்லவில்லை. மாறாக முக்கியப் பிரமுகர்கள்செல்லும் பாதை வழியாக என்னை கோவில் நிர்வாகத்தினர்தான் அழைத்துச்சென்றனர்.

    இதுதான் உண்மை. அவர்கள் விதிமுறையைக் கடைப்பிடிப்பதாக இருந்தால் என்னைஏன் நுழைய அனுமதிக்க வேண்டும். எனவே தவறு அவர்கள் பக்கம்தான் உள்ளது.

    பணத்துக்காகவும், விளம்பரத்திற்காகவும் நான் இப்படி கூறுவதாகவும், எனக்குப்பைத்தியம் பிடித்துள்ளதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஐயப்பனின் உண்மையானபக்தையான எனக்கு இது மிகவும் வேதனை அளிக்கிறது.

    தெரியாமல் செய்து விட்ட தவறுக்காக பரிகாரம் செய்யத் தயாராக இருக்கிறேன்.எனக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்

    போவதாக கூறியுள்ளனர்.

    அதுகுறித்து நான் கவலைப்படவில்லை அனைத்தையும் ஐயப்பனிடம் விட்டுவிட்டேன். அவருக்கு உண்மை எது என்று தெரியும். எனக்கு ஐயப்பன் நீதிவழங்குவார் என்றார் ஜெயமாலா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X