»   »  ஜெயமாலாவிடம் கேரள போலீஸ் விசாரணை

ஜெயமாலாவிடம் கேரள போலீஸ் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐயப்பன் கோவிலுக்குச் சென்று சாமி சிலையை தொட்டுக் கும்பிட்டத்தாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய கன்னடநடிகை ஜெயமாலாவிடம் கேரள மாநில எஸ்.பி இன்று பெங்களூரில் விசாரணை நடத்தின்ர்.

கேரள விஜிலென்ஸ் எஸ்பி அசோக்குமார் இன்று பெங்களூர் வந்து இந்த விசாரணையை மேற்கொண்டார்.

கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் மற்றும் கேரள அரசின் உத்தரவின்படி இந்த விசாரணைநடந்தது.

அதே போல கோவிலுக்குள் பெண் வந்து போயுள்ளதாக செய்தியை முதலில் வெளியிட்ட ஜெயலலிதாவின்ஆஸ்தான ஜோதிடர் பரப்பனங்காடி உன்னி கிருஷ்ண பணிக்கரையும் விசாரிக்க எஸ்பி அசோக்குமார் சென்றார்.ஆனால், அவர் வீட்டில் இல்லை.

இதையடுத்து இன்று பெங்களூர் வந்த அசோக் குமார் பெங்களூர் டாலர்ஸ் காலனியில் உள்ள ஜெயமாலாவின்வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil