twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விசாரணைக்கு ஒத்துழைக்க ஜெயமாலா மறுப்பு

    By Staff
    |

    ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரள விசாரணை குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க கன்னட நடிகைஜெயமாலா மறுத்துவிட்டார்.

    ஐயப்பன் கோவிலுக்குள் சென்றதாக ஜெயமாலா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்துஜெயாமாலாவை விசாரிக்க ஐயப்பன் கோவில் தேவசம் போர்ட் முடிவு செய்தது. இதனையடுத்து தேவசம்போர்டு விஜிலென்ஸ் அதிகாரியான எஸ்பி பிஜி அசோக்குமார் தலைமையில் 2 பேர் அடங்கிய குழு பெங்களூர்வந்தது.

    பெங்களூர் நகர சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனரை சந்தித்து ஜெயமாலாவிடம் விசாரணைநடத்த வந்தது குறித்து அவர்கள் பேசினர். விசாரணை தொடர்பான கடிதத்தையும் கொடுத்தனர். இதையடுத்துகமிஷனர், ஜெயமாலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது நடிகை ஜெயமாலா தனக்கு தேவசம் போர்டில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதனால்விசாரணை அதிகாரிகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

    மேலும் பெங்களூர் டாலர்ஸ் காலனியில் உள்ள ஜெயமாலாவின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகளையும்ஜெயமாலா சந்திக்க மறுத்ததால் அந்தக் குழுவினர் ஏமாற்றுத்துடன் கேரளா திரும்பிச் சென்றனர்.

    இதையடுத்து ஜெயமாலா நிருவர்களிடம் கூறுகையில்,

    நான் 1987ம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றதும் உண்மை. ஐயப்பன் காலை தொட்டுவணங்கியதும் உண்மை. கோவில் விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் 33வருடங்களாக கலைத்துறையில் சேவை செய்து வருகிறேன். அனைவருக்கும் என்னைப் பற்றி தெரியும். நான்ஐயப்பன் காலை தொட்டது தவறு என்று கருதியதால் தேவசம் போர்டுக்கு பேக்ஸ் மூலம் மன்னிப்புக் கடிதம்அனுப்பினேன்.

    இது என்னுடைய தனிப்பட்ட விஷயம், இதை வெளியிடக் கூடாது என்று அந்த கடித்த்தில் தெரிவித்துஇருந்தேன். ஆனால் அவர்கள் இதை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளனர். தேவசம் போர்டில் இருந்துஎன்னை விசாரிக்க வருவதாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வரவில்லை. இங்கு வந்த குழுவினர் யார்என்றே எனக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது இந்த விசாரணைக்கு உட்படும் அவசியம் எனக்கு இல்லை.

    அதே நேத்தில் நான் விசாரணைக்காக பயப்படவில்லை. தேவசம் போர்டில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கொடுத்தாலோ அல்லது போலீஸ் மூலம் முறையான கடிதம் கொண்டு வந்தாலோ விசாரணைக்கு பதில் அளிக்கநான் தயாராக இருக்கிறேன் என்றார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X