ஜெயமாலா மகளும்... 'தூதன்' ஜீவனும்!
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் ஹீரோவாக நடிக்க வருகிறார். முன்னாள் கன்னடத்து அழகுக் கிளி ஜெயமாலாவின் மகள் செளந்தர்யாதான் இதில் அவருக்கு ஜோடி சேருகிறார்.
செல்வா இப்படத்தை இயக்குகிறார். இது அவருக்கு 27வது படம். ஏற்கனவே ஜீவனை வைத்து நான் அவனில்லை படத்தை இயக்கியவர்தான் செல்வா.
இருவரும் தற்போது 3வது முறையாக ஒன்று சேருகிறார்கள்.

தூதன்
இப்படத்திற்கு தூதன் என்று பெயர் வைத்துள்ளனர். பிரபல நடிகர்களை வைத்து பல படங்களின் தயாரித்தவர் வி.சுந்தர் அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளார். அவர்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

சன் மூன் பிக்சர்ஸ்
அவர் சன் மூன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஜெயமாலா மகள்
ஜெயமாலாவின் மகள் செளந்தர்யா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு விசிட் அடிக்கிறார். தமிழில் இதுதான் அவரது முதல் படமாகும்.

கன்னடத்தில் கலக்கியவர்தான்
ஆனால் இதற்கு முன்பு கன்னடத்தில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் ஏற்கனவே கலக்கியவர்தான் செளந்தர்யா.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்....
"உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் -
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ - வாழலாம் என்கிற என்.ஜி.ஆர்.பாடி நடித்த பாடல் வரிகளேயே கதைக்களமாக்கி இருக்கிறேன் என்று படம் பற்றி ரத்தினச்சுருக்கமாக சொல்லி முடித்தார் செல்வா.


Click it and Unblock the Notifications











