ஜீவனுடன் இணைகிறார் சாமியைத் தொட்டு பிரபலமான ஜெயமாலா மகள் செளந்தர்யா!

By Sudha

சென்னை: பெரிய்யய இடைவேளைக்குப் பிறகு மீ்ண்டும் நடிக்கத் திரும்பியுள்ள ஜீவனுடன் இணைகிறார் பிரபல கன்னட நடிகை ஜெயமாலாவின் மகள் செளந்தர்யா.

பார்க்க அப்படியே சின்ன வயது அம்மாவைப் போல துறுதுறுவென்று இருக்கும் செளந்தர்யாவுக்கு தமிழில் இதுதான் முதல் படமாம்.

ஆனால் கன்னடத்தில் ஏற்கனவே உபேந்திராவுடன் காட்பாதர் படத்தில் நடித்துக் கலக்கியுள்ளார் செளந்தர்யா.

செளன்டு பார்ட்டி...

செளன்டு பார்ட்டி...

ஜெயமாலாவின் மகள் செளந்தர்யா, ஒரு ஹீரோயினுக்குத் தேவையான அத்தனை அம்சங்களுடனும் இருப்பதால் நிறையப் பேர் நான் ... நீ என்று போட்டி போட்டு அவரை புக் செய்யக் குவிகிறார்களாம்.

பார்த்து பார்த்து...

பார்த்து பார்த்து...

ஆனால் கதையை நிதானமாக கேட்கும் ஜெயமாலா, தனது மகளுக்குப் பொருத்தமான ஹீரோ, கதையை தேர்வு செய்த பிறகே பச்சைக் கொடி காட்டுகிறாராம்.

முதல்ல உபேந்திரா...

முதல்ல உபேந்திரா...

பல பட வாய்ப்புகள் வந்தும் கூட அவை சரிப்பட்டு வராத நிலையில் உபேந்திராவின் காட்பாதர் படத்தில் அறிமுகமானார் செளந்தர்யா. தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான வரலாறு படத்தின் ரீமேக்தான் இது.

இப்போது ஜீவனுடன்

இப்போது ஜீவனுடன்

இந்த நிலையில் தற்போது தமிழுக்கும் வருகிறார் செளந்தர்யா. ஜீவனுடன் இணைந்து வென்று வா படத்தில் நடிக்கவுள்ளார்.

விஸ்வாஸ் சுந்தர் தயாரிக்க...

விஸ்வாஸ் சுந்தர் தயாரிக்க...

விஸ்வாஸ் சுந்தர் தயாரிக்க ஜீவன் நாயகனாக நடிக்க, கூட செளந்தர்யா நடிக்கவுள்ளார்.

தமிழைக் கலக்குவாரா...

தமிழைக் கலக்குவாரா...

கன்னடத்தில் ஜெயமாலா மகள் என்ற பின்னணியுடன் களம் இறங்கியுள்ள செளந்தர்யா, தமிழையும் கலக்குவாரா என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X