4 முதல்வர்களுக்கு சம்பளம் கொடுத்த ஏஎல்எஸ் நிறுவனம். பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்த ஜெயந்தி கண்ணப்பன்!

சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஎல்எஸ் நிறுவனம் குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை அதன் நிர்வாகியான ஜெயந்தி கண்ணப்பன் ஒன் இந்தியா தமிழ் தளத்தின் ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

4 முதல்வர்களுக்கு சம்பளம் கொடுத்த குடும்பம் | ALS PRODUCTION |REWIND RAJA EP-04 | FILMIBEAT TAMIL

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு ஏஎல் சீனிவாசன் என்பவரால் தொடங்கப்பட்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஏஎல்எஸ் நிறுவனம். 70 ஆண்டுகளை கடந்துள்ள இந்நிறுவனத்தின் மூலம் ஏராளமான குடும்ப சித்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிறுவறு திரைப்படங்களில் அந்தக்காலத்தில் நடிக்காத நடிகர் நடிகைகளே இல்லை என சொல்லலாம். அதோடு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏஎல்எஸ் நிறுவனம் முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து ஏராளமான படங்களை தயாரித்துள்ளது.

திருடாதே படம்

திருடாதே படம்

பல சரித்திர படங்கள், புராண படங்கள், காதல் மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவு படங்கள் என பல படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எம்ஜிஆரின் முதல் சமூகம் சார்ந்த படமான திருடாதே படத்தை தயாரித்தது இந்நிறுவனம்தான்.

சிவாஜியின் 2வது படம்

சிவாஜியின் 2வது படம்

இதோபோல் சிவாஜி கணேசன், எஸ்எஸ்ஆர், பானுமதி, சரோஜா தேவி உள்ளிட்ட பலருக்கு ஏஎல்எஸ் தயாரிப்பில் உருவான படங்கள்தான் திருப்புமுனையாக அமைந்துள்ளது. சிவாஜி கணேசனின் 2வது படமான பணம் படத்தை தயாரித்ததும் ஏஎல்எஸ் நிறுவனம்.

4 முதல்வர்களுக்கு சம்பளம்

4 முதல்வர்களுக்கு சம்பளம்

அதோடு நான்கு முதல்வர்களுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் என்ற பெருமையும் இந்த ஏஎல்எஸ் நிறுவனத்திற்கு உண்டு. மறைந்த தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மற்றும் ஆந்திர முதல்வர் என்டி ராமாராவ் ஆகிய நான்கு பேருமே ஏஎல்எஸ் நிறுவன தயாரிப்பில் பணிபுரிந்துள்ளனர்.

நிர்வகிக்கும் மருமகள்

நிர்வகிக்கும் மருமகள்

ஏஎல்எஸ் நிறுவனத்தை, ஏஎல் சீனிவாசனின் மருமகளான ஜெயந்தி கண்ணப்பன்தான் தற்போது நிர்வகித்து வருகிறார். தமிழ் ஒன் இந்தியா தளத்துக்கு அளித்த நேர்க்காணலில் மேலும் பல சுவாரசிய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ உங்களுக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X