Jayaram daughter Engagement: ஜெயராமுக்கு கிடைத்த புதிய மகன்.. மகள் நிச்சயதார்த்தத்தால் செம ஹேப்பி!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயராம் தனது மகளின் நிச்சயதார்த்தத்தை நேற்று கோலாகலமாக நடத்தினார். இந்நிலையில், அதன் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு அவர் பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் ஜெயராம்.

அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் தனது காதலியுடன் கரம் பிடித்தார். இந்நிலையில், மகளுக்கும் நிச்சயதார்த்தத்தை ஜோராக நடத்தி முடித்துள்ளார் ஜெயராம்.
ஜெயராம் மகள் நிச்சயதார்த்தம்: ஜெயராம் மற்றும் பார்வதி தம்பதியினரின் மகள் மாளவிகா ஜெயராம் தனது காதலனுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். நவ் கிரிஷ் என்பவருடன் மாளவிகா ஜெயராமுக்கு நேற்று கூர்கில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படத்தை தற்போது ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அபாரன் முதல் பொன்னியின் செல்வன் வரை: 1988ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அபாரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயராம். தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த நடிப்பால் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் கோகுலம் படத்தில் அறிமுகமான ஜெயராம் புருஷ லட்சணம், கோலங்கள், முறை மாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, நைனா, பஞ்ச தந்திரம், கடைசியாக பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 வரை நடித்துள்ளார். அடுத்து தளபதி 68 படத்திலும் நடித்து வருகிறார்.
காளிதாஸ் ஜெயராம்: கடந்த மாதம் விக்ரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வரும் காளிதாஸ் ஜெயராமுக்கு அவரது காதலி தாரனியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது தனது மகளின் நிச்சயதார்தத்தையும் நடத்தி முடித்திருக்கிறார் ஜெயராம்.
இன்னொரு மகன்: நவ் கிரிஷ் என்பவருடன் தனது மகள் மாளவிகா நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நிலையில், குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை சற்று முன் வெளியிட்ட ஜெயராம் தனக்கு இன்னொரு மகன் கிடைத்து விட்டார் என பதிவிட்டுள்ளார். கூடிய சீக்கிரமே காளிதாஸ் ஜெயராம் மற்றும் அவரது தங்கை மாளவிகா திருமணமும் நடைபெற உள்ள நிலையில், ஜெயராம் வீடே கல்யாண வீடாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











