மொட்டை அடித்து, வெயிட் குறைத்து... ஆளே தெரியாமல் அசத்தலாக உருமாறிய ஹீரோ... குவிகிறது பாராட்டு
சென்னை: சமஸ்கிருத படத்துக்காக பிரபல ஹீரோ, மொட்டையடித்து, வெயிட் குறைத்து ஆளே மாறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஜெயராம். இவர் தமிழில் முறைமாமன், கோலங்கள், தெனாலி, பஞ்சதந்திரம், ஏகன், துப்பாக்கி, உத்தமவில்லன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் சமஸ்கிருத படம் ஒன்றில் நடித்துள்ளார்.

குசேலன்
நமோ என்ற இந்த சமஸ்கிருதப் படத்தில் குசேலனாக நடித்துள்ளார் ஜெயராம். இந்த படத்துக்காக தலைமுடியை மொட்டையடித்துள்ள அவர், உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளார்.

சமஸ்கிருதம்
ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்த படம், முழுக்க சமஸ்கிருதத்தில் எடுக்கப்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் உள்ள நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

ஜெயராம் லுக்
தமிழகத்தை சேர்ந்த லோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜீஸ் மணி என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் ஜெயராமின் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆளே தெரியாமல்
அந்த லுக் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆளே தெரியாமல் வித்தியாசமாக இருக்கிறார் ஜெயராம். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.


Click it and Unblock the Notifications











