பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் இணைந்தார் ஜெயராம்... கார்த்தி, ஜெயம் ரவியுடன் ஜாலி போட்டோ

By

Recommended Video

Ponniyin Selvan Unnoticed Secrets | Ponniyin Selvan Title Design

சென்னை: தாய்லாந்தில் நடக்கும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில், நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை

ஏ.ஆர்.ரஹ்மான் இசை

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கோயில்களில்

கோயில்களில்

இந்தப் படத்துக்காக, கோயில்களில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் கோயில்களில் படப்பிடிப்பு நடத்த பர்மிஷன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தாய்லாந்தில் ஷூட்டிங் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

அதோடு அங்கு பிரமாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. தாய்லாந்தில் நடந்து வரும் இதன் ஷூட்டிங்கில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை ஐஸ்வர்யா ராய் இணைந்தார். அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

ஜெயராம்

ஜெயராம்

இந்நிலையில் மலையாள நடிகர் ஜெயராமும் மணிரத்னம் டீமுடன் இணைந்துள்ளார். தாய்லாந்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தியுடன் அவர் ஜாலியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X