ஜெயராம் மகனின் திருமணத்தில் ராஜவிருந்து.. சாப்பிட்டு களைத்துப்போன மாப்பிள்ளை!

சென்னை: நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் திருமணம் குருவாருரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இந்த திருமணத்தை தொடர்ந்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட வகை வகையான விருந்து பரிமாறப்பட்டுள்ளது

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயராம், தெலுங்கு மற்றும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஜெயராமின் மகன் காளிதாசும் தந்தையைப்போலவே சினிமாவில் நடிகராக கலங்கி வருகிறார். குழந்தை நட்சத்திரமாக சிறுவயதில் அறிமுகமான காளிதாஸ், 7 வயதிலேயே சத்யன் அந்திகாட்டின் கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல படத்தில் நடித்து வந்த காளிதாஸ், தமிழில், தமிழில் மண் பானையும் மீன் குழம்பும் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

jayaram kalidas wedding

ஜெயராம் மகன்:அந்த படத்தை தொடர்ந்து பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில், திருநங்கை ரோலில் அட்டகாசமாக நடித்து கைத்தட்டலை பெற்ற காளிதாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமலில் மகனாக நடித்தார். அந்த படம் வசூலை அள்ளியது. அண்மையில் வெளியான ராயன் படத்தில் தனுஷூன் தம்பியாக நடித்தார். அந்த படம் நல்ல வசூலை அள்ளியது. நடிகர் காளிதாஸ் கடந்த சில வருடங்களாக தாரிணியை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

காதல் திருமணம்:இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குருவாயூர் கோயிலில் காலை 7.15 மணிக்கு சுபமுஹூர்த்தத்தில் காளிதாஸ் தனது நீண்ட நாள் காதலி தாரிணியை கரம் பிடித்தார்.

இந்த திருமணத்தில் அமைச்சர் முஹம்மது ரியாஸ், நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, கோகுல் சுரேஷ் உள்ளிட்ட சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ராஜவிருந்து: திருமணத்தை தொடர்ந்து நடந்த ரிசப்ஷனை மாதம்பட்டி ஐஸ்வர்யாவின் தலையில் அசத்தலான உணவு பரிமாறப்பட்டது. அதில், ஆம்பூர் மட்டன் பிரியாணி, வெஜ் மட்டன் பிரியாணி, பரோட்டா, அதற்கு சைட் டிஸ் சால்னா, முட்டை குருமா புஜ்ஜி, செட்டினாடு சிக்கன் வறுவல், சிக்கன் திக்கா அதற்கு சைட் டிஸ் மிட் சட்னி, மாங்க மீன் குழம்பு, மீன் வறுவல், இளநீர் அல்வா, பன்னீர் திக்கா, செட்டிநாடு சிக்கல் வறுவல், குண்டர் பேபி கான் வறுவல்,சாதம், கொள்ளு ரசம், வடை, தயில் சாதம், கம்பு தயிர் சாதம், வடகம், கறி தோசை, பொடி தோசை, நெய் தோசை, மாஇஞ்சி தொக்கு, ராமசேரி இட்லி, தட்டு இட்லி, கொத்துக்கறி, நாட்டுக்கோழி சூப், வாழைத்தண்டு சூப் என 150க்கும் மேற்பட்ட வகை வகையான உணவு பரிமாறப்பட்டுள்ளது.

மூச்சு முட்ட சாப்பிட்டேன்: இந்த திருமண உணவு குறித்து பேசிய காளிதாஸ், நான்கு மாதமாக திருமணத்திற்காக பலவிதம் உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தேன். ஆனால் இன்று என்னுடைய திருமணத்தில் வகை வகையான உணவை சாப்பிட்டுவிட்டு, பேச முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றேன். சாப்பாடு ரொம்ப அருமையாக இருந்தது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. இந்த மாதிரியான ஒரு விருந்து சாப்பாடு என்னுடையது கல்யாணத்துல பரிமாறப்பட்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X