Kalidas Marriage: ஜெயராமின் மகன் காளிதாஸ் திருமணம்.. ஊத்துக்குளி ஜமீன் வாரிசை மணந்தார்!

சென்னை: நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

மலையாள நடிகரான ஜெயராம், தெலுங்கு மற்றும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் விஜய் நடித்த கோட் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வசூலை பெற்றது. ஜெயராமின் மகன் காளிதாசும் தந்தையைப்போலவே திரைப்படத்தில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக சிறுவயதில் அறிமுகமான காளிதாஸ், 7 வயதில், சத்யன் அந்திகாட்டின் கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.

jayaram kalidas wedding

ஜெயராமின் மகன்: இதைத்தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்த காளிதாஸ் தமிழில் மண் பானையும் மீன் குழம்பும் என்ற படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகம் ஆனார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமலில் மகனாக நடித்த காளிதாஸ், அண்மையில் வெளியான ராயன் படத்தில் தனுஷூன் தம்பியாக நடித்தார். அந்த படம் நல்ல வசூலை அள்ளியது. நடிகர் காளிதாஸ் கடந்த சில வருடங்களாக தாரிணியை காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த வாரம் இருவீட்டாரும் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து திருமணம் குறித்த அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அப்போது பேசிய ஜெயராம், எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்களில் இதுவும் ஒன்று. காளிதாஸின் திருமணம் என்ற கனவு எங்களுக்கு இப்போது நனவாகியுள்ளது என்றார்.

jayaram kalidas wedding

இன்று திருமணம்: இதை முன்னிட்டு நேற்று திருமணம் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. காலை 7.15 மணிக்கு சுபமுஹூர்த்தத்தில் காளிதாஸ் தனது நீண்ட நாள் காதலி தாரிணிக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்தில் அமைச்சர் முஹம்மது ரியாஸ், நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, கோகுல் சுரேஷ் உள்ளிட்ட சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.திருமணத்தை தொடர்ந்து மேரேஜ் ரிசப்ஷனை கேரளாவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

jayaram kalidas wedding

காளிதாஸின் மனைவி: காளிதாஸின் மனைவி தாரிணி கல்லூரில் படித்துக்கொண்டு இருக்கும்போதே மாடலிங் துறையில் கவனம் செலுத்தி உள்ளார். மேலும் தாரிணி, ஃபேஷன் ஷோக்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா முதல் ரன்னர் அப் போன்ற பட்டங்களையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு மிஸ் திவா யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் தாரிணி பங்கேற்றார். ஊத்துக்குளி ஜமீன் குடும்பத்தின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

jayaram kalidas wedding

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X