'ஜெயஸ்ரீ எனக்கு தங்கை மாதிரி'.. ஈஸ்வர் - மகாலட்சுமியின் குட்டை உடைத்த கணவர் அனில்!
தனக்கும் ஜெய்ஸ்ரீக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெய்ஸ்ரீ தனக்கு தங்கை மாதிரி என்று மகாலட்சுமியின் கணவர் அனில் கூறியுள்ளார்.
கல்யாணப் பரிசு, ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் சின்னத்திரையில் நடன இயக்குனரும், நடிகையுமான ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்னர் ஈஸ்வர் தன்னை கடுமையாக தாக்கியதாக ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயஸ்ரீ புகார்
மேலும் ஈஸ்வர் தனது மகளிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்றும் ஜெயஸ்ரீ புகார் கூறினார். தனக்கும் தனது கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட நடிகை மகாலட்சுமி தான் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஈஸ்வர் மறுப்பு
ஆனால் ஜெயஸ்ரீயின் புகார் அனைத்தையும் ஈஸ்வர் மறுத்தார். ஜெயஸ்ரீயும் மகாலட்சுமியின் கணவரும் சேர்ந்துக்கொண்டு தன்னை குறிவைத்து தாக்குகிறார்கள் என்றும், அவர்கள் இருவருக்கும் கள்ள உறவு இருக்கிறது என்றும் ஈஸ்வர் கூறியிருந்தார். அதே குற்றச்சாட்டை மகாலட்சுமியும் முன்வைத்திருந்தார்.

மகாலட்சுமியின் கணவர்
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில், "என்னுடன் ஏன் சேர்ந்து வாழவில்லை என்று தான் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். மகாலட்சுமியைப் பேசினால் அது என்னைப் பற்றி பேசுவதாகத்தான் இருக்கும். நான் உன்னைப் பற்றி எப்போதும் தவறாக பேசமாட்டேன்.

தங்கை மாதிரி
எனக்கும் ஜெய்ஸ்ரீக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் எனக்கு தங்கை மாதிரி. அவரிடம் இரண்டு மூன்றுமுறை தான் பேசியிருப்பேன். அதற்குள் எனக்கும் அவருக்கும் தொடர்பிருப்பதாக பேசுவதெல்லாம் தவறு. நானும் ஜெய்ஸ்ரீயும் தனியாக சந்தித்ததில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











