நான் நல்லவள் இல்லை.. பேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை..அதிரடியாக காப்பாற்றிய ஹீரோ
சென்னை: பேஸ்புக் லைவ் மூலம் தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகையை பிரபல ஹீரோ காப்பாற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லாக்டவுன் காரணமாக மக்களின் மன ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக எழுந்துள்ளது.
மன ஆரோக்கியத்துக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதுபற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நடிகை
இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் நடிகை ஒருவர் பேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னட நடிகை ஜெயஶ்ரீ ராமையா. பிரபல மாடலான அவர், உப்பு ஹுலி ஹாரா, கன்னட் கொத்தில்லா என்ற படங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

விலகிச் செல்கிறேன்
இதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக்கில், நான் விலகிச் செல்கிறேன். இந்த உலகுக்கும் மன அழுத்தத்துக்கும் குட்பை' என்று போஸ்ட் செய்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், விட்டுவிட வேண்டாம் ஜெயஶ்ரீ, நீங்கள் நிறைய சாதிக்க இருக்கிறீர்கள் என்று அவருக்கு ஆறுதலாக பலர் கருத்துக்களை தெரிவித்தனர்.

பப்ளிசிட்டிக்காக பண்ணலை
அடுத்த சில மணி நேரத்தில் அந்த போஸ்ட்டை நீக்கிய ஜெயஶ்ரீ, நான் நலமாக இருக்கிறேன் என்று பதிவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அதே கேப்ஷனுடன் பேஸ்புக்கிற்கு வந்த ஜெயஶ்ரீ, லைவில் பேசினார். அப்போது, 'அனைவருக்கும் வணக்கம். நான் இதை பப்ளிசிட்டிக்காக பண்ணலை. அதிகமான மன அழுத்தத்துல இருக்கிறேன்.

சாக விரும்பறேன்
என்னால தாங்க முடியலை. அதனால சாக விரும்பறேன். என் வாழ்க்கையில பல வழிகள்ல நான் துரோகம் செய்யப்பட்டதாக நினைக்கிறேன். எனக்கு பணப் பிரச்னை ஏதும் இல்லை. என் சின்ன வயசுல நடந்த ஒரு விஷயத்தை என்னால மறக்கவே முடியலை. அதனால் என்னை கருணை கொலை செய்யுங்கள். தயவு செய்து செய்யுங்கள். நான் நல்ல பெண் இல்லை. தயவு செய்து என்னை கருணை கொலை செய்யுங்கள் என்றார்.
Recommended Video

திரும்பிவிட்டேன்
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அந்த வீடியோவை டெலிட் செய்த அவர், சில மணி நேரம் கழித்து வேறொரு போஸ்டை பதிவு செய்தார். அதில், நடிகர் சுதீப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். என்னை காப்பாற்றியதற்கு உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றி. உங்களை பீதிக்கு உள்ளாக்கியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் திரும்பிவிட்டேன். எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











