மன அழுத்தம்..'இந்த உலகத்துக்கு குட்பை..!' பிக்பாஸ் நடிகையின் பகீர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

By

பெங்களூரு: பிரபல நடிகை வெளியிட்ட திடீர் போஸ்ட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொரோனாவின் தீவிரம் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த வைரஸின் தாக்கம் குறையவில்லை.

இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

மன ஆரோக்கியம்

மன ஆரோக்கியம்

இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுககள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக மக்களின் மன ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக எழுந்துள்ளது. மன ஆரோக்கியத்துக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதுபற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

3 வருட சிகிச்சை

3 வருட சிகிச்சை

நடிகைகள் ஸ்ருதிஹாசன், பாயல் கோஷ் உள்பட சிலர் தாங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் வெளிப்படையாகக் கூறியிருந்தனர். லாக்டவுன், இயற்கைக்கு மாறானச் சூழல் என்பதால் அது மக்களைப் பாதிக்கிறது. அதில் ஒன்று, மன ஆரோக்கியம். இப்போது இதுதான் மக்களின் உண்மையான பிரச்னை. நான் 3 வருடங்களாக இதற்கானச் சிகிச்சையில் இருக்கிறேன். மக்களுக்கும் அதை பரிந்துரைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

நடிகை ஜெயஶ்ரீ ராமையா

நடிகை ஜெயஶ்ரீ ராமையா

இந்நிலையில் கன்னட நடிகை ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்ட போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர், நடிகை ஜெயஶ்ரீ ராமையா. பிரபல மாடலான அவர், உப்பு ஹுலி ஹாரா என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர். இவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், நான் விலகிச் செல்கிறேன். இந்த உலகுக்கும் மன அழுத்தத்துக்கும் குட்பை' என்று போஸ்ட் செய்திருந்தார்.

சாதிக்க இருக்கிறீர்கள்

சாதிக்க இருக்கிறீர்கள்

இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மனதை விட்டுவிட வேண்டாம் ஜெயஶ்ரீ, நீங்கள் நிறைய சாதிக்க இருக்கிறீர்கள் என்று அவருக்கு ஆறுதலாக பலர் கருத்துக்களை தெரிவித்தனர். ஒருவர், 'நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் வலிமையான பெண். அது உங்களுக்குத் தெரியும். எப்போதும் வலுவாக இருங்கள் என்று கூறியிருந்தார்

நலமாக இருக்கிறேன்

நலமாக இருக்கிறேன்

இந்நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் அந்த போஸ்ட்டை நீக்கிய ஜெயஶ்ரீ, நான் நலமாக இருக்கிறேன் என்று பதிவிட்டார். இந்நிலையில் இந்த திடீர் போஸ்ட் பற்றி ஜெயஶ்ரீயின் தோழியும் நடிகையுமான அத்வைதி ஷெட்டி கூறும்போது, அவருக்கு குடும்ப பிரச்னை இருக்கிறது. லாக்டவுனால் வாய்ப்புகள் இல்லை. மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்து தான் வந்திருப்பதாக எப்போதும் சொல்வார்.

அதிர்ச்சியடைய வைத்தது

அதிர்ச்சியடைய வைத்தது

நான் அவரை அடிக்கடி உற்சாக்கப்படுத்த முயற்சிப்பேன். பிரச்னை என்னவென்றால் அடிக்கடி போன் நம்பரை மாற்றிக்கொண்டே இருப்பார். அதனால் அவரைப் பிடிப்பது கடினம். கடந்த சில நாட்களுக்கு முன் மெசஞ்சரில் நலம் விசாரித்தேன். நன்றாக இருப்பதாகச் சொன்னார். இந்நிலையில் இந்த போஸ்ட் அதிர்ச்சியடைய வைத்தது. இன்னும் அவரிடம் பேசவில்லை. எதற்காக இப்படி பதிவிட்டார் என்று கேட்க வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X