என் புருஷனுக்கும் ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்பு.. முதல் முறையாக வாய் திறந்த மகாலக்ஷ்மி!
Recommended Video
சென்னை: தனது கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்பு உள்ளது என சீரியல் நடிகை மகாலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது சீரியல் நடிகர் ஈஸ்வர் விவகாரம் தான். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடிப்பவர் ஈஸ்வர்.
இவரது மனைவி ஜெயஸ்ரீ. ஜெயஸ்ரீயும் சீரியல் நடிகை தான். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

வைரலான போட்டோ
இந்நிலையில் ஈஸ்வர், தேவதையை கண்டேன் சீரியலில் வில்லியாக நடிக்கும் மகாலட்சுமியுடன் நெருங்கி பழகுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மகாலட்சுமியும் ஈஸ்வரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

விவாகரத்து முடிவு
இதேபோல் இருவரும் ஃபேஸ் புக்கில் மாறி மாறி பப்பு பையா என கொஞ்சிக் கொண்ட ஸ்க்ரீன்ஷாட் போட்டோவும் வைரலானது. மகாலக்ஷ்மியை திருமணம் செய்துகொள்வதற்காக ஈஸ்வர் தன்னிடம் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

ஜாமினில் வந்தனர்
இதற்காக ஈஸ்வரும் அவரது தாயாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரும் அவரது தாயாரும் நேற்று முன்தினம் ஜாமினில் வெளிவந்தனர்.

பணம் பறிக்கும் நோக்கம்
வெளியே வந்ததும் பிரஸை சந்தித்த ஈஸ்வர் தனது மனைவி கூறும் குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என்றார். மேலும் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில்தான் அவர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

அவருடன் தொடர்பு
தனது மனைவி ஜெயஸ்ரீக்கும் மகாலக்ஷ்மியின் கணவருக்கும்தான் தொடர்பு உள்ளது என்று கூறி அதிரவைத்தார் ஈஸ்வர். இப்படி கணவன் மனைவி இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விவாகரத்து பிரச்சனை
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் மகாலட்சுமி முதல் முறையாக இதுகுறித்து பேசியுள்ளார். அதில், எனக்கும், தனது கணவருக்கும் பிரச்சனை என்பதால் எங்களுக்குள் விவாகரத்து பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என்றார்.

எந்த உறவும் இல்லை
ஈஸ்வர் தனக்கு ஒரு நண்பர் மட்டும்தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை. எங்களுக்குள் எந்த உறவும் கிடையாது என்றார்.

என்ன உறவு?
மேலும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ எனது கணவருக்கு தோழியாம் என நக்கலாக கூறினார். எங்களின் 7 வருட திருமண வாழ்க்கையில் இந்த தகவல் இதுவரை எனக்கு தெரியாது. அப்படியென்றால் எனது கணவருக்கும், ஜெயஸ்ரீக்கும் என்ன உறவு? என கேள்வி எழுப்பினார் மகாலட்சுமி.

பேச மறுப்பு
அப்போது உங்கள் கணவரை விவாகரத்து செய்வதற்கான பணிகள் நடைபெறுகிறதே என்ற கேள்விக்கு அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்ற மகாலட்சுமி தொடர்ந்து பேச மறுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











