ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நடிகர்
Recommended Video

கொச்சி: மனைவிக்காக ஜெயசூர்யா செய்த காரியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
மலையாள நடிகர் ஜெயசூர்யா ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஞான் மேரிக்குட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் திருநங்கையாக நடிக்கிறார்.
திருநங்கை கதாபாத்திரம் அவருக்கு அவ்வளவு அம்சமாக பொருந்தியுள்ளது.

கடை
ஜெயசூர்யாவின் ஆடை வடிவமைப்பாளராக அவரின் மனைவி சரிதா உள்ளார். சரிதா கொச்சியில் ஒரு பொட்டிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மனைவியின் கடை விளம்பரத்திற்கு மாடலாக மாறியுள்ளார் ஜெயசூர்யா.
ஜெயசூர்யா
மனைவியின் கடை விளம்பரத்திற்கு திருநங்கை வேடத்தில் போஸ் கொடுத்துள்ளார் ஜெயசூர்யா. அந்த விளம்பர பேனர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேனர் புகைப்படத்தை ஞான் மேரிக்குட்டி இயக்குனர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மனைவியின் கடைக்கும், தனது படத்திற்கும் ஒரே நேரத்தில் விளம்பரம் தேடிவிட்டார்.
திருநங்கைகள்
ஞான் மேரிக்குட்டி பட ட்ரெய்லர் கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை திரையுலக பிரபலங்கள் அல்ல மாறாக திருநங்கைகள் சிலர் வெளியிட்டனர்.

பாராட்டு
ஞான் மேரிக்குட்டி ட்ரெய்லரை திருநங்கைகளை வைத்து வெளியிட வைத்த ஜெயசூர்யாவை திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். ஜெயசூர்யா திருநங்கை கெட்டப்பில் அசத்தலாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











