»   »  ஜெயா டிவி மீது குமரிமுத்து பாய்ச்சல்

ஜெயா டிவி மீது குமரிமுத்து பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

போலி பிஷப் யோபு சரவணனுக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதாக பொய்யான செய்தியைஒளிபரப்பியதற்காக ஜெயா டிவி மீது வழக்குத் தொடரப் போவதாக நடிகர் குமரிமுத்து கூறியுள்ளார்.

வீடு கட்டித் தருவதாக கூறி காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை மோசடி செய்ததாக போலி பிஷப் யோபுசரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் ஒரு பிரபல சிரிப்பு நடிகருக்கும் இடையே நெருங்கியதொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த நடிகர் யார் என்பதை போலீஸார் இதுவரைதெளிவுபடுத்தவில்லை.

இந்த நிலையில், தன்னை, யோபு சரவணனின் மோசடியுடன் தொடர்புப்படுத்தி ஜெயா டிவியில் செய்திஒளிபரப்பானது குறித்து நடிகர் குமரிமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஜெயாடிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து குமரிமுத்து கூறுகையில், நான் 46 வருடங்களாக திமுகவில் இருக்கிறேன். 39 வருடங்களாக நடித்துக்கொண்டுள்ளேன். ஒருமுறை நான் தேவலாயம் ஒன்றில் பேசினேன். அது பலருக்கும் பிடித்துப் போகதேவாலயங்களில் என்னைப் பேச கூப்பிட ஆரம்பித்தனர்.

வெளிநாடுகளில் உள்ள தேவாலயங்களிலும் போய் பேசியுள்ளேன். அப்படித்தான் யோபு சரவணனின் பிறந்தநாள் விழாவிலும் கலந்து கொண்டு பேசினேன்.

மற்றபடி யோபுவுக்கும், எனக்கும் வேறு தொடர்பு கிடையாது. ஆனால் கடந்த 18ம் தேதி ஜெயா டிவியில்வெளியான செய்தியில் யோபுவுக்கும், நடிகர் குமரிமுத்துவுக்கும் தொடர்பு உள்ளதாக செய்தி வெளியிட்டார்கள்.

இதனால் எனக்கு பட வாய்ப்புகளும், தேவாலயங்களில் பேசும் வாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காகஜெயா டிவி எனக்கு ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும். பணம் தர மறுத்தால் அந்த டிவி மீது மான நஷ்ட ஈடுவழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார் குமரிமுத்து.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil