குடிபோதையில் கசின் சிஸ்டரை பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகர் மீது வழக்கு
சிம்லா: தனது கசின் சிஸ்டரை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவியுடன் சேர்ந்து ஹிம்மத்வாலா சூப்பர் ஹிட் படத்தில் நடித்ததால் தனக்கு மறுவாழ்வு கிடைத்ததாக தெரிவித்தவர் பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா.
தற்போது 75 வயதாகும் அவருக்கு ஏக்தா கபூர் என்ற மகளும், துஷார் கபூர் என்ற மகனும் உள்ளனர்.

துஷார்
ஏக்தா தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பாலிவுட் படங்களை தயாரித்து வருகிறார். துஷார் கபூர் தந்தை வழியில் நடிகராகிவிட்டார். துஷாருக்கு மகன் உள்ளார்.

புகார்
ஜிதேந்திரா குடிபோதையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரின் கசின் சிஸ்டர் சிம்லா போலீசாரிடம் இமெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் தனது கைப்பட கடிதம் எழுதியும் அனுப்பியுள்ளார்.

உறவுக்கார பெண்
ஜிதேந்திராவுக்கு 28 வயது இருக்கும்போது சிம்லாவில் நடந்த ஷூட்டிங்கிற்கு தன்னை வரச்சொல்லி இரவில் குடித்துவிட்டு வந்து ஹோட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

சிம்லா
1971ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சம்பவத்தின்போது தனக்கு 18 வயது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். 47 ஆண்டுகள் கழித்து அந்த பெண் அளித்த புகார் குறித்து போலீசார் ஜிதேந்திராவிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

பொய்
கசின் சிஸ்டரை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று ஜிதேந்திரா மறுத்துள்ளார். இது ஆதாரமற்ற, வதந்தி. இதில் உண்மை இல்லை என்று ஜிதேந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











