twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோகன் லாலுக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.. ஜித்து ஜோசப் ஜிலீர்!

    |

    சென்னை: திரிஷ்யம் மற்றும் பாபநாசம் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஜித்து ஜோசப் நடிகர்கள் மோகன் லாலுக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று விளக்கியுள்ளார்.

    மலையாள இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியல.. 8 வருட கணக்கை முடக்கியதால் நடிகை கோபம்!ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியல.. 8 வருட கணக்கை முடக்கியதால் நடிகை கோபம்!

    திரிஷ்யம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வசூலை குவித்தது. ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.

    சுயம்புலிங்கமாக கமல்

    சுயம்புலிங்கமாக கமல்

    தமிழில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி லீடிங் ரோலில் நடித்திருந்தனர். பாபநாசம் என்ற பெயரில் இப்படம் வெளியானது. இதில் தமிழ் மொழிக்கு ஏற்ப சில கேரக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டன. சுயம்புலிங்கமாக நடித்திருந்த கமலின் நடிப்பு பாராட்டை பெற்றது.

    நல்ல வரவேற்பு

    நல்ல வரவேற்பு


    இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமாக திரிஷ்யம் 2 படம் அமேஸான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இதில் மோகன் லால், மீனா, அன்சிபா, எஸ்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ரசிகர்கள் பாராட்டு

    ரசிகர்கள் பாராட்டு

    வழக்கம் போல் ஜித்து ஜோசப்பின் இயக்கத்தையும், மோகன் லாலின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். திரிஷ்யம் 2வுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் அதனை ரீமேக் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.

    ஒரு பிறவி நடிகர்

    ஒரு பிறவி நடிகர்

    இந்நிலையில் மலையாளத்தில் திரிஷ்யம் மற்றும் தமிழில் பாபநாசம் படங்களை இயக்கிய ஜித்து ஜோசப், மோகன் லால் மற்றும் கமல்ஹாசனுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை கூறியுள்ளார். அதன்படி, மோகன் லால் ஒரு பிறவி நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பயிற்சி பெற்ற நடிகர்

    பயிற்சி பெற்ற நடிகர்

    இதனால் நேட்சுராலிட்டி அவருக்குள்ளேயே கலக்கப்பட்டு சிறப்பான நடிப்பு வெளிக்கொண்டு வரப்படுகிறது. அதேநேரத்தில் கமல் ஹாசன் ஒரு பயிற்சி பெற்ற நடிகர். அவருடைய அனுபவத்தின் மூலம் கேரக்டருக்கான நேட்சுராலிட்டியை கொண்டு வருகிறார் என கூறியுள்ளார்.

    English summary
    Jeethu Joseph says the difference between Mohan Lal and Kamal haasan. Jeeth Directed Drishyam with Mohan Lal and Papanasam with Kamal haasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X