ஆள விடுங்கடா சாமி.. யாரிடமும் திரிஷ்யம் 3 கதையை கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. ஜீத்து டென்ஷன்!
சென்னை: யாரிடமும் திரிஷ்யம் 3 படத்திற்கான கதையை அனுப்புமாறு தான் கோரிக்கை வைக்கவில்லை என டென்ஷனாகி உள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
மலையாளத்தில் நடிகர் மோகன் லால் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
திரிஷ்யம் 3 படத்தை ஜீத்து இயக்க வேண்டும் என ஏகப்பட்ட கோரிக்கைகள் எழுந்தன.

செம திரில்லர் கதை
அதிக பொருட்செலவில்லாமல் மூளையை மட்டுமே முழுமையாக பயன்படுத்தி மோகன் லால் போன்ற முன்னணி நடிகரை வைத்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியா முழுவதும் பல மொழிகளில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டும் ஹிட் அடித்தது.

ஜீத்துவை வைத்தே
தெலுங்கு மொழியில் வெங்கடேஷ் நடிப்பில் திருஷ்யம் எனும் தலைப்பில் வெளியான அந்த படத்தை ஜீத்து இயக்கவில்லை. டோலிவுட் இயக்குநர் தான் இயக்கினார். ஆனால், தமிழ் மொழியில் அந்த படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்த கமல்ஹாசன், ஜீத்து ஜோசப்பையே வைத்து பாபநாசம் படத்தை உருவாக்கி வெற்றி கண்டார்.

கிளாசிக் கிரிமினல்
முதல் பாகத்தில் ஜார்ஜ் குட்டி தனது குடும்பத்தை காப்பாற்ற போலீசாரின் கிடுக்குப் பிடி விசாரணைகளில் இருந்து தப்பிக்க வருண் பிணத்தை புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையத்திலேயே புதைத்து வைத்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இரண்டாம் பாகத்தில் போலீஸ் நிலையத்தையே தோண்டி எடுத்தும் தனது குடும்பத்தை காப்பாற்ற புத்தகம் ஒன்றை உருவாக்கி அவர் சொன்ன கதை ஜார்ஜ் குட்டியை ஒரு கிளாசிக் கிரிமினலாகவே மாற்றி விட்டது.

ஏகப்பட்ட மீம்ஸ்
திரிஷ்யம் 3 படத்தின் கதை ஜீத்து ஜோசப்பின் ரியல் லைஃப் ஆக இருக்குமோ என்கிற கோணத்திலும், திரிஷ்யம் 3 படத்தின் கதை இது தான் எனவும் ஏகப்பட்ட மீம்கள் கேளிக்கையாக உலா வந்து வைரலாகின. ஆனால், தற்போது அதன் அடுத்த கட்ட விஷம வைரல் இயக்குநர் ஜீத்து ஜோசப்பை டென்ஷன் படுத்தியுள்ளது.

கதை சொல்லுங்க
இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் ஒரிஜினல் இ-மெயில் ஐடியுடன் திரிஷ்யம் 3 படத்தின் கதையை எழுதி அனுப்புங்கள் என்கிற விளம்பரம் கேரளாவில் சில தினங்களாக வைரலானது தான் இயக்குநர் ஜீத்து ஜோசப்பை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. தனது பேரில் போலியாக இப்படியொரு விளம்பரம் பரவி வருகிறது. ரசிகர்கள் யாரும் அதை நம்பி இ-மெயில் அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ரேடியோ பேட்டியின் போது
இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் ஒரிஜினல் இ-மெயில் ஐடியை ரேடியோ விளம்பரம் ஒன்றில் ரிவீல் செய்திருந்ததாகவும், தற்போது அந்த இ-மெயில் ஐடியை போட்டு பரவும் போலி விளம்பரத்தால் ஆயிரக் கணக்கான இ-மெயில்கள் குவிந்து வருவதாகவும் வருத்தப்பட்டுள்ளார்.

கடன் வேண்டாம்
மேலும், யாரிடமும் கதையை கடனாக வாங்கி படம் எடுக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், இப்போதைக்கு தெலுங்கு திரிஷ்யம் 2 படத்தை இயக்கி வருகிறேன். திரிஷ்யம் 3 படத்தை இயக்கும் எண்ணம் இல்லை. ஆள விடுங்கடா சாமி என்கிற ரேஞ்சுக்கு ரொம்பவே டென்ஷனாகி அவர் கூறியிருப்பது சினிமா துறையில் பரபரப்பை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











